புதன், 25 நவம்பர், 2015

சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன




1) சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது இந்த சினிமா 


2) பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது இந்த சினிமா 

3) திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது இந்த சினிமா  

4) நகைச்சுவை என்ற போர்வையில் பொய்யை மனித பண்பாக மாற்றியது இந்த சினிமா 

5) இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது இந்த சினிமா 

6) வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது இந்த சினிமா 

7) காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது இந்த சினிமா 

8) தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது இந்த சினிமா 

9) Fashion என்ற பெயரில் பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம்,பண்பாடுகளை அழித்தது இந்த சினிமா 

10) ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது இந்த சினிமா 

11) உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது இந்த சினிமா 

12) உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது இந்த சினிமா 

13) திரையில் பெண்களை போகப்பொருளாக ஆக்கியது இந்த சினிமா 

14) "அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே "என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது இந்த சினிமா 

15) வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது இந்த சினிமா 

ஒழுக்கக் கேட்டைத்தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை 

மொத்தத்தில் சினிமா  என்பது ஓழுக்கச்சீர்கேட்டின் "கையேடு " 

விபச்சாரத்தின்  "நுழைவாயில்"🚪

சமூக சீர் குலைவிற்கான "ஆயுதம்"  

என் அன்பு நண்பனே 👬 இந்த சினிமாவில் 
1000 நல்ல விசயங்கள் இருந்தாலும் அது உன் வாழ்கைக்கு ஒரு துளியும் உதவாது 


thanks to (Eben Ezar )