கண்டிஷன் பேரில் வாங்கிய பட்டாவாக இருந்தால் அந்த நிலத்தை வாங்குவதை தவிர்க்கலாம். பொது பட்டாவாக இருக்கும் பட்சத்தில் வில்லங்கச் சான்றிதழ் பார்த்து விட்டு நிலத்தை வாங்கலாம். மேலும் பத்திரம் ஏன் இல்லை என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளவும்.
நிலத்திற்கு பத்திரம் மட்டும் இருந்தால் அந்த நிலத்தை வாங்கலாமா?
தமிழக அரசின் 2013 ஆம் ஆண்டு சட்டப்படி நிலத்திற்கு பட்டா இல்லையென்றால் நிலத்தை பதிவு செய்ய இயலாது எனவே நிலத்திற்கு பத்திரம் மட்டும் இருந்தால் அந்த நிலத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாது.

நிலத்தின் பத்திரம் மற்றும் பட்டா நகலை வைத்து அந்த நிலத்தை வாங்கலாமா?
நிலத்தின் பத்திரம் மற்றும் பட்டா நகலை மட்டும் வைத்துக் கொண்டு நிலத்தை வாங்கலாம். ஆனால் வில்லங்கச் சான்றிதழ் மூலம் சரிபாத்துக் கொள்ளவும். மேலும் ஒரிஜினல் பத்திரம் மற்றும் பட்டா தொலைந்த விஷயத்தை நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது காவல் துறையின் மூலமாகவோ உறுதி படுத்திச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

நிலத்தின் விற்பனை அக்ரிமென்டில் அனைத்து வாரிசுகளும் கையொப்பம் செய்து விட்டு கிரையம் செய்யும் போது ஒரு வாரிசுதாரர் வரவில்லை என்றால் நிலத்தை கிரையம் செய்ய முடியுமா?
கண்டிப்பாக கிரையம் செய்ய முடியும். வராத வாரிசுதாரருக்கு உண்டான பங்குத் தொகையினை நீதிமன்றத்தில் செலுத்தி விட்டு நீதிமன்ற அனுமதியுடன் நிலத்தை வாங்கிய நபர் கிரையம் செய்து நிலத்தை தனக்கு சொந்த்மாக்கிக் கொள்ளலாம்.