வியாழன், 26 நவம்பர், 2015

அமீர்கானுக்கு ஆதரவு

சகிப்பின்மை குறித்து அமீர்கான் தெரிவித்தது, விசுவரூபம் எடுத்தநிலையில், சகிப்பின்மை பிரச்சினைக்காக நானோ, மனைவியோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று அமீர்கான் கூறினார்.
இவ்விவகாரத்தில் அமீர்கானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசிஉள்ள மேற்கு வங்காள முதல்-மந்திரி Mamata Banerjee அமீர்கான் இந்தியனாக தான் உணர்ந்ததை பேசிஉள்ளார், அவரை நட்டைவிட்டு போக சொல்வதற்கு நீங்கள் யார்? நாடு எல்லோருக்கும் சொந்தமானது என்று கூறிஉள்ளார்.
இது நமது நாடு... அனைவருக்கும் சொந்தமானது. இது நம்முடைய ஜென்ம மற்றும் கர்மபூமியாகும். எங்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறுவதற்கு நீங்கள் யார்? நாங்கள் எதை அணியவேண்டும், சாப்பிட வேண்டும் என்று சொல்வதற்கும் நீங்கள் யார்?.
இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என அனைவரையும் பாதுகாப்பாக வைப்பேன்... யாரையும் புறக்கணிக்க முடியாது. நான் சாவுக்கு பயப்படவில்லை... எல்லோருக்கும் சாவு வரும்... நான் எப்போதும் தலையை நிமிர்த்தி வைத்துக் கொண்டு, அச்சமற்ற அரசியலை நடத்த பயிற்சி பெற்று வருகின்றேன். என்று மம்தா பானர்ஜி கூறிஉள்ளார்.
Mohamed Mydeen's photo.
ஆமிர் கான் கருத்துக்களுக்கு கெஜ்ரிவால் பாராட்டு..!