வெள்ளி, 27 நவம்பர், 2015

யாருக்கு எந்த பாஷையில் சொன்னால் புரியுமோ -

யாருக்கு எந்த பாஷையில் சொன்னால் புரியுமோ -
அவர்களுக்கு அந்த பாஷையில் சொல்வதுதானே அறிவுடைமை...!
*********************************************************************************************
அமீர்கான் விவகாரத்தில் TNTJ விடுத்த 2 லட்ச ரூபாய் அறிவிப்பை சில முஸ்லிம் சகோதரர்களும் சில இந்து சகோதரர்களும் தவறாக புரிந்து வாதிடுகின்றனர்.
நடைமுறை யதார்த்தப்படி காவல்துறையின் சகல பாதுகாப்பில் என்றென்றும் வாழும் அமீர்கானையும், உத்தவ் தாக்கரேயையும் நெருங்குவதென்பது சாத்தியமா....?
அல்லது அமீர்கான் தவ்ஹீத் கொள்கை படி வாழ்பவர் என்பதால் அவரை காப்பாற்ற வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் இந்த அறிவிப்பை வெளியிட்டதா....?
நமது அறிவிற்கு எட்டியவரை இது ஒன்றுமே இல்லை....
இஸ்லாமிய சமுதாயத்தவரல்லாத எத்தனையோ பேர் நேரடியாக கடுமையாக சொன்னபோதெல்லாம் நேர்த்தியான மௌனத்தில் இருந்துவிட்டு -
"எனது மனைவி இப்படி சொன்னார்" என்று ****அமீர்கான்*** என்ற *****முஸ்லிம்**** சொன்னார் என்னும் ஒரே காரணத்திற்க்காக -
ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை ஊதி பெரிதாக்கும் சிவ சேனா போன்ற வகையறாக்களுக்கும் -
SELECTIVE CONCERN வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய மீடியாக்களுக்கும் -
இப்படி பதிலளிப்பதுதான் சரியான - பொருத்தமான செயலாக இருக்குமே தவிர -
நாங்கள் விழுந்து விழுந்து போராடுவோம் என்பதெல்லாம் நேரத்தை வீணடிக்கும் வேலை என்பதே நிதர்சனம்.
இதோ பாருங்கள்.... ஒற்றை அறிவிப்பு....
பிரச்சினை முடிந்துவிட்டது...
தொட்டதெற்கெல்லாம் தொடை நடுங்கும் கோழைதனத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு -
இது போன்ற நடவடிக்கைகளை தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமல்லாமல் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் -
இந்துத்துவ வெறியற்ற இந்து அமைப்புகளும் -
வினைகளின் எதிர்வினைகளாக கையிலெடுத்து -
பாசிச தீவிரவாதிகளின் நச்சு வாய்களை
மூடி முத்திரையிட்டு -
தமிழகத்தையும் - இந்தியாவையும் -
என்றென்றும் அமைதி பூங்காவாக நீடிக்க செய்யும் கடமை நமது கைகளில் இருக்கின்றது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்திய தேசத்திற்கு நிரந்தர நன்மை பயக்கும் விஷயத்தினை முதல் ஆளாக துவக்கி வைத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் பாராட்டுக்குரியவர்களே......!