ஞாயிறு, 29 நவம்பர், 2015

நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:


குறைந்தது 10 நிமிடங்களுக்கு காயம்பட்ட இடத்தில், சோப்பு போட்டு, வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். காயத்தின் மீது பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் போன்ற ஏதாவது ஒரு ‘ஆன்டிசெப்டிக்’ மருந்தைத் தடவலாம். முடிந்தவரை, காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடும் அளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருந்தால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் தடுப்புப் புரதம் போட்ட பிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும். எந்த ஒரு காயத்துக்கும் ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ (Tetanus Toxoid) தடுப்பூசி அவசியம். கூடவே, காயம் குணமாக, தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.
Jeddah TNTJ's photo.