செவ்வாய், 24 நவம்பர், 2015

ஊடகங்களின் தவறான முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்களே

ஊடகங்களின் தவறான முஸ்லீம் எதிர்ப்பு
பிரச்சாரங்களே இந்தி நடிகர் அமீர் கான்
இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றார் .
"நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கேட்கிறார் என் மனைவி"
இந்தியாவில் உள்ள ஊடகங்களின் முஸ்லீம்
எதிர்ப்பு ஒளிப்பரப்புகளை தடை செய்யாமல்
விட்டால் அதுவே முஸ்லீம்களுக்கு எதிரான
கலவரங்களாக இந்துத்துவா சக்திகள் பயன் படுத்தும்
அமீர் கான் அவரது மனைவி கிரன் ராவ் இந்த
கருத்து சொன்னதாக டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கான ராம்நாத் கோயென்கா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் கான் இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
"நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அன்றாடம் நடைபெறும் சகிப்பின்மை சார்ந்த சம்பவங்களை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இத்தகைய சம்பவங்களால் என் மனைவி கலக்கம் அடைந்துள்ளார். நானும் அச்சமடைந்துள்ளேன் என்பதை மறுப்பதற்கில்லை.
நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூறுகிறார்.
கடந்த 6 முதல் 8 மாதங்களாக நாட்டில் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளது. அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது.
வீட்டில் என் மனைவியுடன் நான் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் "நாம் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா?" எனக் கேட்டார். குழந்தைகள் எதிர்காலம் கருதி இவ்வாறு கேட்பதாகக் கூறினார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை திறக்கவே அச்சமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் மக்களின் பாதுகாப்பு உணர்வு குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதேபோல், நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுக்கத் துணியும் போது அதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும், சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இவ்வாறு நடந்தால் பாதுகாப்பு உணர்வு இருக்கும். ஆனால், மக்கள் மத்தியில் அச்ச உணர்வே மிச்சமிருக்கிறது. காரணம் அரசுகள் சட்டத்தை மீறுபவர்களை தட்டிக் கேட்கவில்லை.
பெருகிவரும் சகிப்பின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் பல எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும், திரைக் கலைஞர்களும் தங்கள் விருதுகளை திருப்பியளித்துள்ளனர். இது சரியான முடிவே. அவர்கள் தங்கள் எதிர்ப்பை சரியான முறையில் பதிவு செய்துள்ளனர்.
தாத்ரி சம்பவத்துக்குப் பின்னர் வெளியான சில அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் கண்டனத்துக்குரியவை. வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அது கண்டனத்துக்குரியதே என்றார் அமீர் கான்
இந்தி நடிகர் ஷாரூக் கானை தொடர்ந்து
நடிகர் அமீர்கானும் தன்னுடை அதிருப்பை
தெரிவித்துள்ளார் மத்திய மாநில அரசுகள்
கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பது காலத்தின்
கட்டாயம் அமிர் கானின் அதிருப்தியை கண்டிக்கும்
பி.ஜே.பி மற்றும் சங்பரிவார் அமைப்புகளை
வண்மையாக கண்டிக்கின்றது

இந்திய தேசிய லீக் கட்சி's photo.