சேலம் ஓமலூர் சையத் இம்தியாஸ் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்ய கோரி தமுமுக மனு!
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த சகோதரர். சையத் இம்தியாஸ் அவர்களின் படுகொலைக்கு காரணமான சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்ய கோரி சேலம் மாவட்ட தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் மாவட்ட எஸ்பி சுப்புலஷ்மி மற்றும் ரயில்வே எஸ்பி விஜியகுமார் ஆகியோரிடம் உண்மை குற்றவாளிகளை கைது செய்து , மறு பிரேத பரிசோதனையை வீடியோ பதிவுடன் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி புகார் கடிதம் வாங்கப்பட்டது...
இந்நிகழ்வுக்கு மேற்கு மாவட்ட மமக செயலாளர் முகம்மது ரயீஸ் தலைமையில் மேற்கு மாவட்ட தமுமுக செயலாளர் அமானுல்லா,மற்றும் கிழக்கு மாவட்ட தமுமுக செயலாளர் ஷேக் மஹமூத்,தமுமுக பொருளாளர் பாளை.சுல்தான்,மமக கிழக்கு மாவட்ட செயலாளர் இமாம் மொஹீதீன் ஆகியோர் உடனிருந்தனர்..