சனி, 23 ஜனவரி, 2016

இஸ்ரேலுடன் நெருங்கும் இந்தியா : சவூதியுடன் நெருங்கும் சீனா.....!!


பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேல் உலக வரைபடத்தில் திடீரென உருவாக்கப்பட்ட நாடாகும். இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் இந்தியா பாலஸ்தீனையே ஆதரித்து வந்தது. மகாத்மா காந்தியும் பாலஸ்தீனையே ஆதரித்தார்.
ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா இஸ்ரேலுடன் அளவுக்கு அதிகமாக ஒட்டி உறவாடுவதை காண முடிகிறது.
உலக நாடுகள் காரி உமிழும் கேவலமான இஸ்ரேலை இந்தியா நேச நாடாக ஆக்கி வருடத்திற்கு ரூ 20 ஆயிரம் கோடிக்கும் மேல் இஸ்ரேலிடமிருந்து ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்கிறது.
இந்நிலையில்...
சவூதி அரேபியா அரசு சீன பிரதமரை சவூதிக்கு அழைத்து கௌரவித்து அவருக்கு தங்க மாலையை பரிசாக அணிவித்துள்ளது.
ஆனால் இந்திய பிரதமர் மோடியை இதுவரை சவூதி அரேபிய அரசு கண்டு கொள்ளவேயில்லை.
மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது அவரை அழைத்த அன்றைய சவூதி மன்னர் அப்துல்லாஹ் அரபிகளுக்கு மட்டுமே கன்னத்தோடு கன்னம் வைக்கும் வழக்கத்தை முஸ்லிம் அல்லாத மன்மோகன் சிங் அவர்களுக்கு கன்னத்தோடு கன்னம் வைத்து கௌரவப்படுத்தினார்கள்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மன்னர் அப்துல்லாஹ் ஒருமுறை இந்தியா வந்தார். அப்போது மன்னர் அப்துல்லாஹ் கூறுகையில் இந்தியா என்னுடைய இரண்டாவது தாய் வீடு என்றார்.
அந்த அளவிற்கு இந்தியாவிற்கும், சவூதி அரேபியாவிற்கும் இருந்த நேசம் மோடி ஆட்சிக்கு பின்னால் குறைந்து சவூதி அரேபியாவும் சீனாவும் நெருக்கம் காட்டி தங்கமாலையை அணிவிக்கிறார்கள்.
இந்தியா இஸ்ரேலுடன் நெருங்குகிறது, சீனா சவூதியுடன் நெருங்குகிறது.
முகநூல் முஸ்லிம் மீடியா's photo.

Related Posts: