திங்கள், 11 ஜனவரி, 2016

காலிப் குருவின் சாதனை..!


அப்சல் குருவின் மகன் காலிப் குரு பத்தாம் வகுப்புத்
தேர்வில் 95 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று
தேறியுள்ளார். அவருக்கு சமூக ஊடகங்களில்
பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஜம்மு- காஷ்மீர் மாநிலக் கல்வித் துறை நடத்திய
தேர்வுகள் அனைத்திலும் ஏ1 கிரேடு பெற்றுள்ளார் காலிப் குரு.
அப்சல் குரு 2013 பிப்ரவரி ஒன்பதாம் தேதி தூக்கில் போடப்பட்டார்.
காலிப் குரு தன் தந்தையை 2012 ஆகஸ்டில்
திஹார் சிறையில் கடைசியாகப் பார்த்தார்.
தன் தந்தையைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம்
தன் படிப்பு குறித்துத் தந்தை விசாரிப்பார் என்றும்
அறிவியல் பாடத்தில்நல்ல மதிப்பெண் பெற வேண்டும்
என்று அறிவுறுத்துவார் என்றும்
காலிப் குரு மனம் நெகிழக் குறிப்பிட்டார்.
தந்தையை இழந்த நிலையிலும் மனம் சோர்ந்து விடாமல்
படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்கும்
காலிப் குருவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இறையருளால் அவர் இன்னும் நன்கு படித்து,
அவருடைய தந்தை விரும்பியபடியே
நல்ல மருத்துவராய் வருவதற்கும் இறையருள் துணை நிற்கட்டும்..!
-சிராஜுல்ஹஸன்
Siraj Ul Hasan's photo.


Related Posts: