திங்கள், 11 ஜனவரி, 2016

குவைத்தில் அக்கமா இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு


ஜனவரி 11:2016
குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள நபர்களுக்கு சில நிபந்தனைகள் மற்றும் பிழையுடன் கூடிய பொது மன்னிப்பு குவைத் அரசு இன்று முதல் அறிவித்துள்ளது மற்றும் வேற வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
இதன்படி:
1) குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்கள் பிழை கட்டி தங்களுடைய நாடுகளுக்கு சென்று
திரும்பும் வேறு வேலைக்கு திரும்பவும்
குவைத்திற்கு வரும் விதத்திலும்
குவைத் தமிழ் பசங்க
2) குவைத்தில் இருந்த படி பிழைகட்டி
வேறு வேலை தேடி கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
குவைத் தமிழ் பசங்க
இதற்கு முக்கியமாக சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்கள் நீங்களாக அதற்கான குவைத்
அரசு அமைத்துள்ள வெளிநாட்டு வாழ் நபர்களுக்கான அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று இதற்காக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Sponsore-ஐ விட்டு வெளியே வந்த நபர்கள் மீது அவர்களுடைய குவைத்திகள் புகார் செய்துள்ள வெளிநாட்டினர் குவைத் அரசின் சட்ட அதிகாரிகள் அனுமதி அளித்தால் மட்டுமே குவைத்தில் இருந்த படி பிழைகட்டி வேறு வேலை தேடி கொள்ள முடியும் . ஆனால் இவர்கள்
தங்களுடைய நாடுகளுக்கு சென்று விட்டு திரும்பும் வேறு வேலைக்கு குவைத் வர முடியும்.
ஆனால் இதற்கு எல்லாம் பிழை கட்டியே ஆக வேண்டும்.
இதை தவிர குவைத்தில் தற்போது நடக்கு சோதனை இந்த பொது மன்னிப்பு காலத்திலும் சோதனை தொடரும் எனவும் அப்படி பிடிபடும் நபர் குவைத்திற்கு வரமுடியாத படி தடை விதிக்கப்படும்
மற்றும் இது வரை பிடிபட்டு சிறையில்
உள்ளவர்கள் பிழைகட்டி பிறகே நாடு கடத்தப்படுவார்கள்.
மொத்தத்தில் பிழை கட்டியே ஆக வேண்டும்.
இதை தவிர கடந்த வாரம் உயர் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குவைத்தில் சட்டத்திற்கு
புறம்பாக தங்கியுள்ள 110000 நபர்களுக்கு பிழையில்லாமல் பொது மன்னிப்பு வழங்கும் எண்ணம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். இதனால் அரசுக்கு பெரிய வருமான இழப்பு ஏற்படும் என்றும் மற்றும் இது இவர்களை போன்று மற்றவர்களுக்கு சட்டத்தை மீற தூண்டுதலாக இருக்கும் என்று
அவர் குறிப்பிட்டிருந்தார்
இது இந்தியர்கள் உட்பட குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள
நபர்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும்.
ஆனால் இந்த பொது மன்னிப்பு எத்தனை நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
உங்களுக்கு தெரியவரும் குவைத் மற்றும் வளைகுடா செய்திகளை
இந்த WhatsApp எண்ணுக்கு +965 50927547 அனுப்பி வைத்து உங்களுடைய நட்புகளுக்கு பகிர்வு செய்ய உதவுங்கள்.



💠 குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு குவைத் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

💠 குவைத்தின் MOI சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளவர்களுக்கு குவைத் அரசு ஒரு
வாய்ப்பு வழங்கியுள்ளது:
💠குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக மற்றும் விதிமுறைகளை மீறி தங்கியுள்ள நபர்கள் அதற்கான அபராத தொகையை செலுத்தி தங்களுடைய நாடுகளுக்கு சென்றுவிட்டு புதிய VISA-வில் குவைத்திற்கு மீண்டும் வேலைக்கு வர வாய்ப்பு வழங்கப்படும் என்றும்
தவறும் பட்சத்தில்
👐🏿👐🏾FINGERING(கைரேகை)பதிந்து அனுப்பி வைக்கும் நபர்கள் திரும்பவும் குவைத் வரமுடியாத படி
 BLACK LIST-யில் வைக்கப்படுவார்கள்
என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
📰 இந்த செய்தியை ministry’s Director of Public Relations and Security Media Brig Adel Al-Hashash செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
💶 இந்த அபராத தொகை நாள் ஒன்றுக்கு KD 2 (தீனார்) மற்றும் வருடத்திற்கு KD 600(தீனார்)அதிகபட்சமாக இருக்கும் என்று தெரிகிறது.
💠 அபராத தொகையை
(பைன்)கட்டிய பின் தங்கள் நாடுகளுக்கும் செல்லலாம்,விரும்பினால் இங்கேயே அக்கமா அடித்து சட்டப்பூர்வமாக வேலையும் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
💠மேலும் அவர்கள் மீது குற்ற பதிவுகள் இருந்தால் வெளியேற முடியாது எனவும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
💠 இந்த செய்தி குவைத்திலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கையான குவைத் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.
அதற்கான லிங்க்
🌍 http://news.kuwaittimes.net/…/amnesty-for-illegals-in-kuwa…/
நன்றி -New Source : KUNA

Related Posts: