திங்கள், 18 ஜனவரி, 2016

அன்பார்ந்த சகோதரர்களே ஓர் முக்கிய செய்தி!

Abu Asaraf Abusali's photo.

கோவை குனியமுத்தூர் மின்நகர் பகுதியில் சகாபுதீன் என்பவர் தன் மனைவியுடன் குடியிருந்து வருகிறார். 13.01.16 அன்று மதியம் சுமார் 1 மணியளவில் சகாபுதீன் அவர்களின் மனைவி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் 2 ஆண்கள் பர்தா அணிந்து முகத்தையும் மறைத்து வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்கள் வீட்டில் இருந்தவர்கள் பெண்கள் என்று நினைத்து கதவைத் திறந்த உடன் திருடர்கள் (பர்தா அணிந்த நபர்கள்) வீட்டிற்கு உள்ளே நுழைந்து அப்பெண்ணின் முகத்தில் மிளகாய் தூள் வீசியடித்து , முகத்தில் காயப்படுத்தி, நைலான் கயிறால் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியிறுக்கிறான்.
மேலும் கழுத்தில் இருந்த மூன்று பவுன் நகை, பீரோவில் இருந்த
மூன்றறை பவுன் நகை மற்றும் பணம் (35000) முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாயும் எடுத்து சென்றிருக்கிறான்.
சகோதரர்களே ; சகோதரிகளே
தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலும் இது சம்மந்தமான விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
(இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்கள் முகம் மறைக்க தேவையில்லை முகத்தை மறைப்பது இஸ்லாமிய வழி முறை அல்ல முகத்திரை இதை போன்ற திருட்டு சம்பவங்களுக்கு தவறாக பயன் படுத்த வாய்ப்புள்ளது)
Abu Asaraf Abusali

Related Posts: