இந்தியாவில் கடந்த டிசம்பரில் சிமென்ட் விலை சராசரியாக 7.3 சதவீதம் சரிந்துள்ளது. சிமென்ட்டுக்கான தேவை குறைந்ததே அதன் விலை குறைய காரணமாக அமைந்தது என ரிலையன்ஸ் செக்யூரிடீஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மூட்டை சிமென்ட்டின் சராசரி விலை 308 ரூபாயாக இருந்த நிலையில் , 2015ம் ஆண்டு டிசம்பரில் இது 285 ரூபாயாக குறைந்தது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் சிமென்ட் விலை கணிசமாக குறைந்த போதும் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் அதன் விலை சராசரியாக மூட்டைக்கு 5 ரூபாய் அதிகரித்து 350 ரூபாயாக இருந்தததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது