திங்கள், 18 ஜனவரி, 2016

பீட்டாவிற்கு எதிராக விமர்சனங்கள்:

சர்வதேச அளவில் விலங்குகளில் நலனிற்காக போராடி வரும் பீட்டா அமைப்பின் நடவடிக்கைகள் பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், தனது கொள்கைகளுக்கு எதிராக அந்த அமைப்பே செயல்படுவதாக விமர்சனங்களும் எழாமல் இல்லை.

இறைச்சி மற்றும் ஆடைகளுக்காக விலங்குகளை கொல்லக்கூடாது, நம்முடைய பொழுது போக்கிற்காக விலங்குகளை பயன்படுத்துதல் கூடாது, வீடுகளில் வளர்க்கும் நாய்களை சங்கிலியிட்டு கட்டக்கூடாது இவையெல்லாம் விலங்குகளை உரிய முறையில் நடத்தக் கோரி போராடி வரும் சர்வதேச அமைப்பின் அதாவது பீட்டாவின் முழக்கங்கள். 300 பணியாளர்களுடன், 30லட்சத்திற்கும் அதிகமான மக்களின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு அமெரிக்காவின் விர்ஜினியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

1980 ஆம் ஆண்டு இங்க்ரிட் நியுகிர்க் என்பவர் தனது நண்பர் ALEX PACHECO துணையுடன் தொடங்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு ஆய்வுக்கூடங்களில் குரங்குகள் வதைப்படுத்துவது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு அது தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்தது மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இந்த அமைப்பு தற்போது சேவல் சண்டை, காளைச் சண்டை, போன்ற பல்வேறு விசயங்களை எதிர்த்து விழிப்புணர்வு போராட்டங்களை நடத்தி வருகிறது.

குறைந்த அளவிலான ஆடைகளுடன் பெண்களை விழிப்புணர்வு பரப்புரைகளில் பயன்படுத்துவது உள்ளிட்ட விசயங்கள் பீட்டாவிற்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கிய போது, இப்படிப்பட்ட பரப்புரைகள் மூலமே ஊடகம் மற்றும் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று பீட்டா நிறுவனர் இங்க்ரிக் விளக்கமளித்தார். ஆனால் இதே பீட்டா அமைப்பு விலங்குகளை அதிகளவில் கொன்று குவிக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

விர்ஜினியாவில் இந்த அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் காப்பகத்திற்கு வரும் விலங்குகள் ஒவ்வொரு ஆண்டும் 80சதவீதத்திற்கும் அதிகமானவை கொல்லப்படுவதாக விர்ஜினியாவின் விவசாயம் மற்றும் நுகர்வோர் சேவைக்கான அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்தக் காப்பகத்திற்கு வந்த 2631 விலங்குகளில் 2324 கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2010ஆம் ஆண்டு ஜூலையில் இந்தக் காப்பகத்தில் ஆய்வு நடத்திய டாக்டர் டேனியல் கோவிச்சின் கூற்றுப்படி பீட்டாவிடம் அடைக்கலமாக வரும் விலங்குகளில் 84 சதவீதம் 24 மணிநேரத்திற்குள்ளேயே கொல்லப்பட்டு விடுகின்றன. நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விலங்குகள், விபத்துகளில் சிக்கி மிகுந்த சிரமத்துடன் உயிர் வாழும் விலங்குகள் போன்றவைதான் கொல்லப்படுவதாக பீட்டா ஆதரவாளர்கள் விளக்கம் தருகின்றனர். இத்தகைய கொலைகளைச் செய்பவர்கள் பாரம்பரிய வழக்கங்களை எதிர்த்துக் கொடி பிடிப்பதுதான் முரணாக இருப்பதாக பீட்டாவை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

PuthiyaThalaimurai TV's photo.


Comments:  Bhuvanai Kiruba beta அமைப்பை குறைசொல்லுவதால் என்ன பயன் அந்த அமைப்பு எப்படி இந்தியகுள் வந்தது , நமது அரசாங்கத்தைவிட வலிமையானதா? நாம் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்று தீர்மானிக்கும் சக்தி அதற்கு இருக்கின்றதா?? மத்திய மாநில அரசுகள் கோட்டைவிட்டுவிட்டு beta வை பெரிய புடுங்கியாட்டம் காட்டுறானுங்க ,அனைத்து நாடுகளும் ஐ நா க்கு கட்டுப்படும் என்று சொல்லப்படுகின்றது ஆனால் அவங்களாளே சின்ன நாடு இலங்கைகுள் நுழைய முடியல அடக்கமுடியல வந்துடாங்க beta வை தூக்கிக்கொண்டு , ரெண்டு அரசுக்கு முழு இடுபாடுஇல்லை அவ்வளவே.
Santhosh Kumar பேசாம காளைகளை நாலு டீமா பிரிக்கறோம். ஏலம் விட்றோம் . அபிஷேக் பச்சன்,ஷாருக்கான், அம்பானி,மல்லைய்யா நாலு பேரையும் ஆளுக்கொரு டீமுக்கு ஓனர் ஆக்கறோம். அப்புறம் பாருங்க நடக்கற கூத்தை. உலக அளவுல நம்ம ஜல்லிக்கட்டு பேமஸ் ஆயிடும்

Related Posts: