திங்கள், 4 ஜனவரி, 2016

பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளரவும் , நிலத்தில் நுண்றுயிர்கள் பெருகவும் ,எளிய வழி.


பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளரவும் , நிலத்தில் நுண்றுயிர்கள் பெருகவும் ,எளிய வழி.
அமிர்தகரைசல்:
மாடு ஒரு முறை போட்ட சாணம், ஒரு முறை பெய்த கோமியம், இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாலியில், எடுத்துக் கொண்டு அதில் ஒரு கை பிடி வெல்லம் ஒரு குடம் தண்ணிர் ஆகியவற்றைசேர்க்க வேண்டும்.
24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும் . அமிர்தகரைசல் தயார்.
தயாரான அமிர்தகரைசலுடன் 10 பங்கு தண்ணிர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான்(டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம் வாய்கால் நீரிலும் கலந்துவிடலாம்.