சனி, 23 ஜனவரி, 2016

முட்டாள்தனமான கருத்துப்படம்...!


எங்கே குண்டு வெடித்தாலும் உடனே
ஒரு முஸ்லிம் பெயரையோ 
ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரையோ சொல்வது
வாடிக்கையாகிவிட்டதுபோல,
சாதி ரீதியாக எங்கே எந்த அசம்பாவிதம் நடந்தாலும்
உடனே பிராமணர்கள்தான் காரணம்
என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு
இந்துத்துவவாதிகள்தான் காரணம் என்பது சரி.
ஆனால் இந்துத்துவத்தின் குறியீடு பிராமணர்களின்
உச்சிக்குடுமிதான் என்று யார் சொன்னது? யார் கற்பித்தது?
ஒரு பாசிசக் கொள்கையின் குறியீடாக ஒரு குறிப்பிட்ட
பிரிவினரின் கலாச்சாரத்தை
அடையாளப்படுத்துவது வடிகட்டிய முட்டாள்தனம்.
முஸ்லிம் தோழர்கள் ஒன்றை
நினைவில் கொள்ள வேண்டும்.
இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக
பிராமணர்கள் பேசினாலும் சரி, அவர்களின்
உச்சிக்குடுமியை அறுக்கவும் இந்துத்துவ பாசிசம் தயங்காது.
எத்தனையோ பிராமண சகோதரர்கள் இந்துத்துவாவை
எதிர்த்துப் பேசிக்கொண்டும் போராடிக்கொண்டும்
இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
இன்னொரு கேள்வி .
பிராமணர்கள் மட்டும்தான் இந்துத்துவாவைத்
தூக்கிப்பிடிக்கிறார்களா?
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை
பிரதமர் ஆக்கியே தீருவோம் என்று ஓடி ஓடி உழைத்த
வைகோ, விஜயகாந்த், மருத்துவர் ராமதாஸ்
போன்றவர்கள் எல்லாம் பிராமணர்களா?
தலித் தலைவர்களான ராம்தாஸ் அதாலே,
ராம் விலாஸ் பாஸ்வான், உதித்ராஜ் போன்றவர்களும்
இன்று இந்துத்துவாவைத்தானே
தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்?
அப்படிப் பார்க்கப்போனால் ரோஹித் மரணத்துக்கு
இந்தத் தலித் தலைவர்களும் ஒரு வகையில் காரணம்தானே?

-சிராஜுல்ஹஸன்
Siraj Ul Hasan's photo.

Related Posts: