ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

“ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்..! பாசிசத்தை வேரறுப்போம்!”




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெல்ஃபேர் பார்ட்டியின்
தேசியத் தலைவர் இல்யாஸ் அவர்களும் பொதுச் செயலாளர்
ஹம்ஸா அவர்களும் டெல்லியில் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.
“மோடிக்கு எதிராகப் பேசுவதே தேச துரோகம்தான் என்று
அலீகரைச் சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் கூறுகிறார்.
மோடிக்கு எதிராகவும் சங்பரிவாரங்களுக்கு எதிராகவும்
கருத்துகளைச் சொன்னதால்தான்
ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக
மாணவர்களும் டெல்லி ஜேஎன்யு மாணவர்களும்
வேட்டையாடப்படுகின்றனர்” என்று வெல்ஃபேர்
பார்ட்டி தலைவர்கள் கூறினர்.
அறிவிக்கப்படாத இந்த நெருக்கடி நிலைக்கு எதிராக,
நாடு முழுவதும் தேசிய அளவில் “ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்
பாசிசத்தை வேரறுப்போம்” எனும் தலைப்பில்
பரப்புரை இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தனர்.
ஏராளமான செய்தியாளர்கள் வந்திருந்தனர்.
டெல்லியில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில்
வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத் துணைத் தலைவரும்
தமிழகத்தைச் சேர்ந்தவருமான
சுப்ரமணி அவர்களும் கலந்துகொண்டார்.
ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்..!
பாசிசத்தை வேரறுப்போம்..!!
-சிராஜுல்ஹஸன்