ரூ.20 மதிப்புள்ள சூரிய விளக்கு செய்யும் முறை:
முதலில் ஏ4 சீட் அளவில் புதிய அலுமினிய தகடு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலியான பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். பாட்டில் அளவு தகட்டில் துளையிட்டு, அதனுள் பாட்டிலை பொருத்த வேண்டும். கீழ்பகுதி முக்கால் பரப்பும், மேல் பகுதி கால் பங்கும் கொண்டிருக்க வேண்டும்.
பின்னர் பாட்டிலில் 90% சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். அந்த நீரில் 20 எம்.எல், பிளீச்சிங் கலவையை சேர்க்க வேண்டும். இதன் பிறகு அந்த பாட்டிலை வீட்டின் மேற்கூரையில் துளையிட்டு பொருத்த வேண்டும். பாட்டிலின் கீழ்பகுதி வீட்டிற்குள்ளும், மேல் பகுதி சூரிய வெளிச்சம் படும்படி கூரையின் மேற்பரப்பிலும் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் பாட்டிலின் கலவை மேல்பட்டு, பாட்டிலின் கீழ் பகுதி 50 வால்ட் வெளிச்சத்தை கொடுக்கும்.
இந்த விளக்கு 5 வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். இத்தகைய சூரிய ஒளி விளக்குகளை தாராவி ராஜீவ்காந்தி நகரில் சுமார் 50 வீடுகளுக்கு பொருத்தியுள்ளார் தாஜூதீன். இதனிடையே இரவிலும் எரியும் வகையில் சூரிய விளக்கை இப்போது கண்டுபிடித்துள்ளார் என்பதுதான் ஹைலைட். இதற்கு ரூ.500 மட்டுமே செலவாகும்.
செய்யும் முறை:
ஏ4 சீட் புதிய அலுமினிய தகடு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு 1 லிட்டர் அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலியான பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும். தகட்டில் பாட்டில் அளவு துளையிட்டு, அதில் பாட்டிலை பொருத்த வேண்டும். கீழ்பகுதி முக்கால் பரப்பும், மேல் பகுதி கால் பங்கும் கொண்டிருக்க வேண்டும். காலியான பாட்டிலுக்குள் 90 விழுக்காடு சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதனுள் 20 எம்.எல், பிளீச்சிங் கலவையை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் 5 வால்ட் எல்இடி பல்புகள் 6 வாங்கி அதை ஒயர் மூலம் சால்டிரிங் கொண்டு இணைக்க வேண்டும். பிறகு இதை வெள்ளை நிற டியூப்புக்குள் வைத்து பாட்டிலுக்குள் பொருத்த வேண்டும்.
அந்த வெள்ளை டியூப்பை 2 அடி பிளாஸ்டிக் குழாயோடு இணைத்து, அந்த குழாயை பாட்டில் மேற்பரப்பில் இருக்கும்படி செய்ய வேண்டும். குழாயின் மேற்பரப்பில் பசையுடன் கூடிய செல்போன் ரீ ஜார்ஜபிள்
பேட்டரியை இணைக்க வேண்டும். சோலார் பேனலை (சூரிய ஒளியை உள் வாங்கும் தகடு) பொருத்த வேண்டும். பாட்டிலின் பக்கவாட்டில் ஆன், ஆஃப் சுவிட்ச் ஒன்றை இணைத்துவிட்டு பாட்டிலின் கீழ்பகுதி வீட்டிற்குள்ளும், மேல் பகுதி சூரிய வெளிச்சம் படும்படியும், கூரையின் மேற்பரப்பில் பொருத்த வேண்டும்.
பேட்டரியை இணைக்க வேண்டும். சோலார் பேனலை (சூரிய ஒளியை உள் வாங்கும் தகடு) பொருத்த வேண்டும். பாட்டிலின் பக்கவாட்டில் ஆன், ஆஃப் சுவிட்ச் ஒன்றை இணைத்துவிட்டு பாட்டிலின் கீழ்பகுதி வீட்டிற்குள்ளும், மேல் பகுதி சூரிய வெளிச்சம் படும்படியும், கூரையின் மேற்பரப்பில் பொருத்த வேண்டும்.
‘‘சூரிய ஒளியை சோலார் பேனல் உள்வாங்கி பேட்டரில சேமிக்கும். நைட் சுவிட்ச் போட்டதும் வெளிச்சம் வரும். இதுக்கான செலவு வெறும் ரூ.500தான். ஆனா, ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து வெளிச்சம் தரும்...’’ என்கிறார் தாஜூதீன். ‘‘இதை இந்தியா முழுக்க கொண்டு போகப் போறோம். இளைஞர்களுக்கு செய்முறை பயிற்சி கொடுத்து அவங்கவங்க பகுதில இதை மக்களுக்கு செய்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப் போறோம்...’’ சிரித்தபடி சொல்கிறார் தாஜூதீன்.