ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

தனியாக வசிக்கும் இளம்பெண் வீட்டு முன்பு தொடர்ந்து ஆணுறை வீசிச்சென்ற போலீஸ் எஸ்.ஐ.: கண்காணிப்பு காமிராவில் சிக்கினார்


கேரள மாநிலம் கண்ணனூர் போலீஸ் சரகம் பகுதியைtsr_camசேர்ந்த இளம்பெண் தனியே வசித்து வருகிறார். இவரது கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளம்பெண் காலையில் எழுந்து வாசலை பார்க்கும்போது வாசலில் 2 முதல் 4 வரையிலான ஆணுறை பாக்கெட்டுகள் கிடந்தன.
தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து எடக்காடு போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து துபாயில் உள்ள கணவரிடம் தெரிவித்தார். அவர் வீட்டின் மறைவான இடத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும்படி அறிவுரை கூறினார். அதன்படி யாருக்கும் தெரியாமல் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.
சம்பவத்தன்று காலையும் வீட்டு வாசலில் ஆணுறை பாக்கெட்டுகள் கிடந்தன. ஆவேசமடைந்த இளம்பெண் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தார்.
கேமிராவில் எதிர் வீட்டில் வசிக்கும் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஸ்பாபு (வயது50) ஆணுறை பாக்கெட்டுகளை வீட்டு வாசலில் வீசிய காட்சி பதிவாகி இருந்தது.
கேமிரா காட்சிகளை எடக்காடு போலீசில் இளம்பெண் காட்டினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து கண்ணனூர் மாவட்ட எஸ்.பி.க்கு தெரிவித்தனர். இதனையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் சுரேஸ்பாபு தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து ஐ.ஜி.க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எஸ்.பி. தெரிவித்தார்.