வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பேண்ட் பாக்கெட்டில் செல்போன்வைபவரா நீங்கள் அப்ப முதல படிங்க

phone-in-pocket-640x360கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதுமட்டுமின்றி, ஒருநாளில் குறைந்தது இரண்டுமணி நேரம் கைபேசிகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேபோல், சார்ஜரில் இருக்கும் கைபேசியை எடுத்துப் பேசுபவர்களும், படுக்கைக்கு அருகாமையில் சார்ஜ் போடுபவர்களும் இதைவிட இருமடங்கு அதிக பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

எனவே, திருமணமாகி புதிய வாரிசை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்களில் கைபேசிகளை வைக்காமல் இருப்பதும், பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வேளைகளில் செல்போன்களை அணைத்து வைத்திருப்பதும் பாதுகாப்பானது என இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளுக்குநாள் செல்போன் விற்பனையும், ஆண்களிடையே மலட்டுத்தன்மையும் அதிகரித்துவருவது தொடர்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் இவை இரண்டுக்குமே நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.