நேற்று டெல்லியில் ப.சிதம்பரத்தின் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் தொடர்ந்து வாரந்தோறும் சென்ற ஆண்டு எ.ழுதிய 51 கட்டுரைகளின் தொகுப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் தொடர்ந்து வாரந்தோறும் சென்ற ஆண்டு எ.ழுதிய 51 கட்டுரைகளின் தொகுப்பு.
Standing Guard - A Year in Opposition எனும் இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், கபில் சிபல், சீதாராம் எச்சூரி, ஷிவ் விஸ்வநாதன் முதலிதோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் சிதம்பரத்தின் பேச்சு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இந்திய மக்கள் பெரிய அளவில் எதிர் எதிராகப் பிளவுண்டு இருந்த தருணங்கள் என அவர் பிரிவினைக் கலவரங்கள் நடந்தது, பாபர் மசூதி இடிக்கப்பட்டது, மூன்றாவதாக பாஜக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டுக் காலம் என்கிறார் சிதம்பரம். இந்தக் கணக்குப்படி வாஜ்பேயி தலைமையிலான ஆறாண்டு ஆட்சியைக் காட்டிலும் மோடியின் இந்த ஓராண்டு கொடிது என்றாகிறது. விளிம்பு மக்கள் மத்திதில் ஒரு அச்சம், பதட்டம் உருவாகியுள்ளது என்கிறார்.
பல்கலைக் கழகங்களுக்கும் மடங்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். பல்ஜலைக்கழகங்களில் அந்த வயது மாணவர்கள் தவறாக இருப்பதற்கும் உரிமை உடையவர்கள்.
எவ்வளவு வக்கிரமாக இங்கே விவாதங்கள் உருமாற்றப் படுகின்றன... தாத்ரி சம்பவத்தில் நடந்தது என்ன? எந்த ஒரு கும்பலும் யாரையும் குத்திக் கொல்வதற்கு உரிமை உண்டா எனும் விவாதம், கொல்லப்பட்ட முஸ்லிமின் வீட்டில் இருந்தது ஆட்டுக் கறியா இல்லை நாட்டுக் கறியா என்கிற விவாதமாக மாற்றப்பட்டது. ரோகித் விஷயத்தில் என்ன நடந்தது? முதல் தலைமுறையாகப் படிக்க வந்த ஒரு தலித் இளைஞனை தற்கொலைக்கு ஒரு பல்கலைக்கழகம் காரணமான பிரச்சினை அவன் தலித்தா இல்லையா என்கிற பிரச்சிபையாக ஆக்கப்பட்டது. JNU வில் சில மாணவர்கள் அப்படி முழக்கமிட்டார்களா இல்லையா என்பதல்ல. பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதுதான் விவாதம் ...."