வியாழன், 25 பிப்ரவரி, 2016

சகிப்பின்மை அதிகரிப்பை இந்தியா தடுக்கத் தவறிவிட்டது: சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டனம்

சர்வதேச பொதுமன்னிப்பு சபை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சர்வதேச விதிமுறை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு(2015-16) அந்த சபை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா குறித்து கூறி இருப்பதாவது:-
பல்வேறு துறை கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் தங்களுக்கு அளித்த தேசிய விருதுகளை3566c276-4c2c-431f-9c74-043c21c35578_S_secvpf மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்து இருக்கின்றனர். இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதை இதற்கு காரணமாக இவர்கள் குறிப்பிட்டு உள்ளனர் சமூக தொண்டு நிறுவனங்கள் மீதான கொள்கைகளையும், வெளிநாடுகளில் இவற்றுக்கு கிடைத்து வந்த நிதியையும் இந்தியா கடுமையாக முடக்கி இருக்கிறது.
நாட்டில் மத ரீதியான பதற்றம் அதிகரித்து உள்ளது. இதேபோல் பாலின மற்றும் சாதி ரீதியான பாகுபாடு காரணமாக வன்முறை பரவி நிற்கிறது. சுதந்திரமாக கருத்து தெரிவிப்போர் மீது தணிக்கையும், தாக்குதல்களும் தீவிரவாத எண்ணம் கொண்ட இந்துக்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு மதரீதியான வன்முறைகளை இந்திய ஆட்சியாளர்கள் தடுக்கத் தவறிவிட்டனர். இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருவது கவலைக்கும், கண்டனத்துக்கும் உரியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Related Posts: