வேலூர்: வேலூரில் வீடு ஒன்றில் கேஸ் சிலண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாநகரில் உணவு விடுதியில் ஊழியராக பணியாற்றிக்கொண்டு இருப்பவர் சங்கர நாராயணன். நெல்லை மாவட்டம் முனைஞ்சிபட்டியைச் சேர்ந்தவர். 40 வயதாகும் சங்கர நாராயணனுக்கு உஷா என்கிற மனைவியும், 9 வயதில் கீர்த்தி என்கிற மகளும், 4 வயதாகும் சாய்கிருஷ்ணன் என்கிற மகன் உள்ளனர். இவர் சத்துவாச்சாரியில் குடும்பத்துடன் வசித்துவந்தார். 23 ஆம் தேதி இரவு படுக்க சென்ற நிலையில் சிலிண்டரை அணைக்காமல் விட்டதால் கேஸ் வெளியேறி வீடு முழுவதும் பரவியுள்ளது. இது தெரியாமல் இன்று காலை அடுப்பு பற்றவைக்க உஷா முயன்ற போது வீடு முழுவதிலும் பரவி இருந்த கேஸால் தீப்பற்றி சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டிலிருந்த பொருள்கள் தீயில் எரிந்ததோடு அனைவர் மீதும் தீப்பற்றியது. அவர்கள் அலறி கத்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் உயிருக்குப் போராடிய சங்கரநாராயணன்,உஷா, கீர்த்தி, சாய்கிருஷ்ணன் நால்வரையும் மீட்டு சிசிக்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு பேருக்கும்சிகிச்சையளிக்கப்பட்டது. இன்று மாலை சிகிச்சை பலனின்றி சங்கரநாராயணன், சாய்கிருஷ்ணன் இருவரும் உயிரிழந்தனர். உஷா, கீர்த்திதொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாழன், 25 பிப்ரவரி, 2016
Home »
» அடிக்கடி வெடிக்கும் கேஸ் சிலிண்டர்கள்.. மக்களே ஜாக்கிரதை… வேலூரில் 2 பேர் பலி
அடிக்கடி வெடிக்கும் கேஸ் சிலிண்டர்கள்.. மக்களே ஜாக்கிரதை… வேலூரில் 2 பேர் பலி
By Muckanamalaipatti 5:20 PM