இவர் தான் பிரித்தானியா நாட்டு பிரதம மந்திரி மதிப்புக்குரிய திரு டேவிட் கமரோன் அவர்கள். வீட்டம்மாவின் சமையலுக்கு மலிவான உடன் மீன் வாங்க வந்திருக்கிறார் எந்த படை பட்டாளமும் இல்லாமல். அதே போல் இங்குள்ள மனிதர்களும் இவற்றை எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை. நான் பெரிது நீ சிறிது என்ற பாகுபாடுகளும் இங்கு இல்லை.
இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் உள்ள மக்களும், அரசியல் வாதிகளும் அறிய வேண்டியதும் , கற்க வேண்டியதும் நிறையவே இருக்கு.தேவையற்ற வரட்டு கௌரவங்களும், தலைக்கணங்களும் வைத்து நீங்கள் படுத்தும் பாடு சில வேளைகளில் மனதில் சகித்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாதவை. வெட்கி தலைகுனிவையே பல தடவை ஏற்படுத்தி இருக்கு.
இவ்வுலகில் யாரும் யாருக்கும் பெரியவனும் இல்லை, அடிமையும் இல்லை. எல்லோருமே சரிசமன். கற்று பெற வேண்டியது பட்டத்தை அல்ல பண்பையும், ஒழுக்கத்தையுமே.