செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கோத்ரா ரயில் எரிப்பு : பாஜகவின் திட்டமிட்ட சதி – அதிர்ச்சி தகவல்…..!!

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை நடத்தப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
godhra-apr-22-slide
இதுத்தொடர்பாக 2004 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த லல்லு பிரசாத் யாதவ் வெளியிலிருந்து ரயில் எரிக்கப்படவில்லை, ரயிலின் உள்ளிருந்து தான் தீ பிடிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் பட்டேல் சமூகத் தலைவர் ராகுல் தேசாயி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாரதீய ஜனதாவால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம். முஸ்லிம்களால் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பீதியினை இந்துக்களிடையே பரப்புவதன் மூலம் ஓட்டு வேட்டையாடுவதே பாஜகவின் திட்டம். இப்போதும் குஜராத்தில் அத்தகைய பயம் இந்துக்களிடையே உண்டு. ஆனால், கலவரங்களை உருவாக்குவதும் தாக்குதல் நடத்துவதும் பாரதீய ஜனதா கட்சி செய்யும் திட்டமிட்ட வேலைகள்.
images (2)
பாரதீய ஜனதா கட்சியினரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்துக்கள் ஒன்றாக நிற்கவில்லையேல் முஸ்லிம்கள் தங்களைக் கொல்வர் என்ற பீதியினை இந்துக்களிடையே உருவாக்குவதற்காகவே கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிடப்பட்டது.
முஸ்லிம்களைப் பயமுறுத்தி ஆட்சியினைத் தக்க வைக்கும் சித்தாந்தத்தையே பல ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.