புதன், 24 பிப்ரவரி, 2016

27 நூற்றாண்டுகளுக்கு பிறகு கடல் மட்டம் உயர்ந்தது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

27 நூற்றாண்டுகளுக்கு பிறகு கடல் மட்டம் உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகம் வெப்பமயமாவதால் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதானல் அவ்வப்போது இயற்கை பேred-sea-color-100327-02ரிடர்கள் உருவாகி அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் உலக அளவில் கடல்களின் நீர்மட்டமும் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. 1900 முதல் 2000–வது ஆண்டு வரை 14 சென்டிமீட்டர் அல்லது 5.5 இஞ்ச் அளவு உயர்ந்து இருக்கிறது.
இந்த நீர் மட்டத்தின் அளவு 20–ம் நூற்றாண்டின் பாதியில் இருந்து உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது 27 நூற்றாண்டு களுக்கு பிறகு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது