திங்கள், 29 பிப்ரவரி, 2016

இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்


இந்தியாவில் இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் பெற்றுள்ளது என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை மகாInternet screenராஷ்டிரா மாநிலம் இடம் பெற்றுள்ளது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலகட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள்:
இந்தியாவில் 32.5 கோடி இண்டர்நெட் பயன்படுத்துவோர்கள் உள்ளனர். இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 2.77 கோடி பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இதில், 97 லட்சம் பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் இண்டர்நெட்டை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் 2.68 கோடி பேரும், ஆந்திராவில் 2.39 கோடி பேர், கர்நாடகாவில் 2.17 கோடி பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
நாட்டின் மொத்த இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் 12 கோடி பேர் பிராட்பேண்ட் இணைய சேவையை பயன்படுத்து வருகின்றனர்.
தில்லி (1.84 கோடி), மும்பை (1.52 கோடி), கொல்கத்தாவில் (86 லட்சம்) போன்ற முக்கிய பெரும் மாநகரங்களில் குறைந்த அளவே இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.