திங்கள், 22 பிப்ரவரி, 2016

இந்து பல்கலைக்கழகத்தில் மோடிக்கு எதிராக முழக்கம்..!




பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில்
கலந்துகொண்டு மோடி பேசிக் கொண்டிருந்தபோது
கூடியிருந்த மாணவர்கள் மோடிக்கு எதிராக
கோஷங்கள் எழுப்பினர். இதனால் விழா நிகழ்ச்சிகள்
சிறிதுநேரம் தடைபட்டன.
கோஷங்கள் இட்ட மாணவர்களைக் காவல்துறை
தடியடி நடத்திக் கலைத்தனர்.
ரோஹித் தற்கொலை, ஜேஎன்யு விவகாரம் போன்ற
பிரச்னைகளைத் தொடர்ந்து நாடு முழுவதும்
மாணவர்கள் பாஜக அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான
ஏபிவிபிகூட வெறுத்துப் போயுள்ளது.
ஜே என் யு விலுள்ள ஏபிவிபி மாணவர் அமைப்பின்
பொதுச் செயலாளரும் இன்னும் இரண்டு மாணவப்
பொறுப்பாளர்களும் ஏபிவிபியிலிருந்து விலகிவிட்டனர்.
ஆட்சியாளர்களே, இளையதலைமுறையின்
கோபத்தை எளிதாக எடைபோட்டு விடாதீர்கள்...!
-சிராஜுல்ஹஸன்

Related Posts: