சனி, 27 பிப்ரவரி, 2016

இந்தியாவில் தேச துரோகிகளால் நிரம்பிய மாநிலம் எது தெரியுமா ?: பட்டியலை பாருங்கள் !


இந்தியாவில் தேச விரோத குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை, தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிடும் வருடாந்திர அறிக்கையை வைத்து, அதுல் தாகூர் என்பவர் ஆய்வு செய்ததில், தேச விரோதிகள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள் எவை எவை என்று கண்டறிந்திருக்கிறார்.
*அதன்படி, 2014-ம் ஆண்டு தேச விரோத குற்றத்தின் கீழ், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
*தீவிர இடதுசாரி  இயக்கங்கள் உள்ள  இந்த இரண்டு மாநிலங்களில் ,  பீகாரில் 16 பேரும், ஜார்க்கண்டில் 18 பேரும் தேச விரோத குற்றத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
*அதற்க்கு அடுத்தபடியாக கேரளாவில், ஐந்து பேர் தேசவிரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24_02_2016_010_020_002
மேற்கு வங்கம், ஓடிசாவில் தலா இரண்டு பேரும்,  அஸ்ஸாம், சட்டீஸ்கர், ஆந்திரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் தேசவிரோத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
*சிவப்பு நிறம்: தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்
*நீல நிறம்: தேச விரோத சட்டம் தவிர்த்து, மாநிலங்களுக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டவர்கள்