வியாழன், 18 பிப்ரவரி, 2016

நெல்லை அருகே 3 பேர் படுகொலை : போலீசார் உடந்தை;

 மக்கள் குற்றச்சாட்டு திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

ஆலங்குளம்: நெல்லை அருகே 3 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு போலீசார்தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பெரும்  பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன்கோயில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (44). இவரது  மனைவி பேச்சியம்மாள் (42). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தார். இவர்களது மகள்கள் கோமதி (21), மாரியம்மாள் (20), உஷா (17), சதிஷா  (15), மகேஸ்வரி (12), மகாலட்சுமி (6). இதில் கோமதி மனநிலை பாதிக்கப்பட்டவர். 2வது மகள் மாரியம்மாள் வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வந்தார். மற்ற 4  மகள்களும் படித்து வருகின்றனர்.
கடந்த 12ம் தேதி அதே பகுதியைச்சேர்ந்த நயினார் மகன் முத்துராஜ் என்ற ஆண்டவர்(32) பேச்சியம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனியாக இருந்த  கோமதியிடம் 20 ரூபாயை கொடுத்து பீடி வாங்கி வரும்படியும் மீதி காசில் தின்பண்டம் வாங்கி சாப்பிடும்படியும் கூறியிருக்கிறார். அத்துடன் கோமதி கையை  பிடித்து மானபங்கப்படுத்த முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி பேச்சியம்மாளுக்கு தெரியவந்தது.இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து,  போலீசார் முத்துராஜை அழைத்து எச்சரித்துள்ளனர். இது முத்துராஜிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
images (10)
நேற்று மாலை அரிவாளுடன் சென்ற அவர் அங்குள்ள சுடலை கோயிலில் இருந்த பேச்சியம்மாளின் தந்தை கோவிந்தசாமியிடம் ‘‘உன் மனைவி என்னை பற்றி  போலீசில் எப்படி புகார் செய்யலாம்’’ என தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதில் கோவிந்தசாமி அதே இடத்தில் இறந்தார். ரத்தம்  படிந்திருந்த அரிவாளுடன் அங்கிருந்து சென்ற முத்துராஜ், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைபார்த்து விட்டு ரெட்டியார்பட்டி-நெட்டூர் ரோட்டில் சக  பெண்களுடன்  நடந்துவந்த பேச்சியம்மாளை வெட்டியுள்ளார். 
/வயிற்றில் வெட்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பேச்சியம்மாள் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்த சிலர் அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த  மாரியம்மாளிடம் தெரிவிக்கவே அவர் கதறியழுதபடி தாய் விழுந்து கிடந்த இடத்திற்கு ஓடி வந்தார். உடனே தனது கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து தாயின்  வயிற்றில் கட்டு போட்டார். அந்த நேரம் பார்த்து அருகில் பதுங்கி இருந்த முத்துராஜ் ஆவேசம் கொண்டவராக ஓடி வந்து மாரியம்மாள் கழுத்தில் சரமாரியாக  வெட்டினார். இதில் தாய், மகள் அதே இடத்தில் துடி துடித்து இறந்தனர்.ஆலங்குளம் போலீசார் சென்று 3 பேர் உடலை கைப்பற்றி நெல்லை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்துராஜை பிடிக்க டிஎஸ்பி சங்கு,  இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், தனிப்படை எஸ்ஐ மாரியப்பன் ஆகியோர்  தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறார்கள்.

Related Posts: