
இந்த முக்கோணத்தின் குறிப்பிட்ட பகுதியைத் தாண்டும்போது கப்பல்களும் விமானங்களும் மாயமாக மறைந்துவிடுகின்றன. அமானுஷ்ய ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் இயக்கமே இதற்குக் காரணம் என பொதுமக்கள் நம்புகின்றனர்.
இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்.
இந்தப் பகுதியின் அமானுஷ்யத்தை ஈ.வி.டபிள்யூ.ஜோன்ஸ் என்பவர் செப்டம்பர் 16,1950 அன்று பத்திரிகையில் வெளியிட்டார். அதற்குப் பின் இம்முக்கோணம் சார்ந்து பல கட்டுரைகள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
தொலைந்த விமானங்களில், பயிற்சியின்போது, ‘ப்ளைட் 19’ எனும் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான குண்டு வீசும் வானூர்திகள் ஐந்தும் அடங்கும். விமானத்துடனான கடைசித் தொடர்பாக, “நாங்கள் இப்போது எங்கிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை” என்ற விமானியின் செய்தியே கிடைத்திருக்கிறது.
இந்த மர்மத்திற்கு மர்மம் சேர்க்கும் விதமாக, காணாமல் போன வானூர்திக்கு உதவ 13 பேர் கொண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கான கப்பல்படை விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்குப் பின் அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை.
பின்னர், புளோரிடா கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்தவர்கள் இந்த விமானம் ரோந்தில் இருந்திருக்கக் கூடிய அந்த தருணத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததை கண்டதாக தெரிவித்தனர்.
வெப்ப மண்டலச் சூறாவளிகள் வெப்பமண்டல கடல் பகுதியில் பரவலாய்க் காணப்படும் சக்திவாய்ந்த புயல்களாகும். பெர்முடா முக்கோணப் பகுதியில் நிரந்தரமாக வீசிக்கொண்டிருக்கும் இவைபோன்ற புயல்களில் சிக்கியே விமானங்களும் கப்பல்களும் காணாமல் போவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தின் இந்த கதையில் அடிப்படை உண்மைகள் துல்லியமானவையாக இருக்கின்றன, ஆனால் முக்கியமான சில விவரங்கள் இல்லாமலிருக்கின்றன.
சம்பவம் நடந்து முடிந்த சமயம் காலநிலை கொந்தளிப்பானதாக மாறியிருந்தது. அத்துடன் டெய்லருக்கும் பிளைட் 19 விமானக் கூட்டத்தின் பிற விமானிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் குறித்த கடற்படை அறிக்கைகள் மற்றும் எழுதப்பட்ட பதிவுகள் காந்தப் பிரச்சினைகள் இருந்ததாய் சுட்டிக் காட்டவில்லை.