திப்புசுல்தான் ஸ்ரீரங்கம் பகுதியில் இருந்த மசூதிகளின் நிர்வாக செலவுக்கு ஆயிரம் வராகன் வழங்கினார். ஆனால் இந்து கோவில்களுக்கு லட்சம் வராகன் வழங்கினார். தானும் மது அருந்தாமல் பாரத கண்டத்தில் மதுவே கூடாது என்று மதுவிலக்கு கொண்டுவந்த முதல் மன்னர் திப்புசுல்தான்தான்.
வீடுகள் கட்டுவதற்கு காரை கலவைகள் தயார் செய்யும் போது அதில் மதுவை ஊற்றி கலந்தார்கள். அந்த முறை தவறு என்று கூறி கரும்புசாறு ஊற்றி கலந்து உறுதியாக கட்டுங்கள் என்று கூறியவரும் அவரே.
வீடுகள் கட்டுவதற்கு காரை கலவைகள் தயார் செய்யும் போது அதில் மதுவை ஊற்றி கலந்தார்கள். அந்த முறை தவறு என்று கூறி கரும்புசாறு ஊற்றி கலந்து உறுதியாக கட்டுங்கள் என்று கூறியவரும் அவரே.
திப்புசுல்தான் காலத்து நாணயங்களில் அவர் தன்னுடைய உருவத்தை பொறித்துக்கொள்ளவில்லை. மாறாக இந்து கோவில்களின் உருவத்தை பொறித்தார். வேலுநாச்சியார் திப்புசுல்தானிடம் அடைக்கலமாக இருந்தபோது, அவருக்கு தங்கத்தாலான அபிராமி சிலையை பரிசாக கொடுத்தார்.
போர்க்களத்தில் முதல் முதலாக தீ ஏவுகணைகளை பயன்படுத்தியவர் திப்புசுல்தான்தான். இந்துக்களும், முஸ்லிம்களும் என்னுடைய 2 கண்கள் என்று கூறிய திப்புசுல்தானின் புகழை நாம் அனைத்து இடங்களிலும் பரப்பவேண்டும்.
Thanks: @Ever Green