சனி, 30 ஏப்ரல், 2016

ஈஸி ஐஸ்க்ரீம்


Homemade Vanilla Icecream-jpg-997கோடைய இப்பவே குளு குளுனு என்ஜாய் பண்ண கண்ட கண்ட ஜஸ்க்ரீம சாப்பிட்டு உடலை கெடுத்துக்காம.. வீட்டிலேயே ஈஸியா ஹெல்த்தியா ஐஸ்க்ரீம் செய்து நீங்களும் சாப்பிட்டு உங்க குழந்தைகளுக்கும் கொடுங்க. இந்த சம்மரை உங்க குடும்பத்துடன் கூலா கொண்டாடுங்க………!
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – தேவைக்கேற்ப
சோள மாவு – 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் – 4 டீ ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சிறிது

செய்முறை:
* அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
* சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.
* அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.
* பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்.
* 1 மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) மறுபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.
குறிப்பு:
நாமே வெண்ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். தயிரை பீட்டர் கொண்டு அடித்தால் வெண்ணெய் கிடைக்கும். இந்த ஐஸ்க்ரீமையே சாக்லேட், மேங்கோ என பல வகையில் மாற்றிக்கொள்ளலாம்.

குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து!!!


நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.
நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன.
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை
சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து
இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்
மருந்து ஒன்று
சுண்டைக்காய்ப் பொரியல்
பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்திருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டிக் கிளறி மிளகுத்த்கூல் கல் உப்புப் போட்டு பொரியலாக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்
மருந்து இரண்டு
பாகற் காய் கூட்டு
மிதி பாகல் அல்லது நாட்டு பாகற்காய் மட்டும் பயன் படுத்த வேண்டும்
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல்ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்
மருந்து மூன்று
அகத்திக் கீரை பூண்டு சாறு
அகத்திக் கீரை சாறு .. ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு. .... .. ஒரு தேக்கரண்டி
தேன் ....... தேவையான அளவு
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கியிருக்கும் புழுக்கள் வெளியேறும்
மருந்து நான்கு
வாய் விடங்கப் பொடி
வாய் விடங்கம் ஓமம் மிளகு சுக்கு கறிவேப்பிலை கல் உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்
இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்டிலி சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்
குறிப்பு : வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மறுத்துக் கடைகளிலும் கிடைக்கும் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் அந் தமிழ் நாட்டு அடுக்களையில் மிளகு போல தவறாமல் இடம் பிடித்திருந்த நாம் மறந்துவிட்ட பொருள் இது
மருந்து ஐந்து
வேப்பிலை துவையல்
சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்
கசப்பு காரணமாக சிலர் குடிக்க மறுப்பார்கள் அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்
வேப்பங் கொழுந்து கறிவேப்பிலை பூண்டு மிளகு ஓமம் சுக்கு ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆறவைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளிஎறம்
மருந்து ஆறு
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 தேக்கரண்டிஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி.
அளவு குடித்து வர பெரியவர்களின் குடல் புழுக்கள் வெளியேறும்
மருந்து ஏழு
கீரை சூப்
சின்ன வெங்காயம் - இரண்டு
நல்ல மிளகு - இரண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)
பூண்டு - 1 பல்
சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.
மருந்து எட்டு
* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
மருந்து ஒன்பது

* புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்
மருந்து பத்து
குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.
மருந்து பதினொன்று
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.
தகவல்;- நண்பர்.திரு.பொன்.தங்கராஜ்

கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் சொத்து கணக்கு

கையிருப்பில் பணமே இல்லை – அசையா சொத்துகள், காரும் கிடையாது: 

dc-Cover-61vatma4n7buqj9jcnj8535a77-20160430014241.Mediதிருவனந்தபுரம்:

கேரள சட்டசபைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ்-முஸ்லிம் லீக் தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை மீண்டும் பிடிக்க இடதுசாரி இயக்கங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

மாநிலத்தில் புதிதாக ஆட்சி அமைக்க பா.ஜ.க.வும் முயன்று வருகிறது. இதனால், அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசிநாளான நேற்று கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி மத்திய திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து பத்துமுறை இதேதொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள உம்மன் சாண்டி, பதினொன்றாவது முறையாக 2016-சட்டசபை தேர்தலிலும் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார்.  

இதையொட்டி, வழக்கமாக செல்லும் தேவாலயம் மற்றும் பெற்றோரின் சமாதிகளுக்கு சென்று பிரார்த்தனை செய்த உம்மன் சாண்டி, தேர்தல் அலுவலர் ஸ்ரீலேகாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மகன் சாண்டி உம்மன், கோட்டயம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோஸ் மணி உள்பட ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் வந்திருந்தனர்.

வேட்பு மனுவுடன் நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனது கையிருப்பில் பணமே இல்லை என்று கூறியுள்ளார். அவரிடம் சொந்த காரும் இல்லை. ஆனால், மனைவியிடம் 2010-ம் ஆண்டு மாடல் ‘மாருதி ஸ்விப்ட் டிசையர் கார்’ உள்ளது. உம்மன் சாண்டி பெயரில் ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 40 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.32 லட்சம் மற்றும் பிள்ளைகள் பெயரில் ரூ.13 லட்சம் அசையும் சொத்துகளும் உள்ளன.

மனைவியின் ரொக்க கையிருப்பு ரூ. 10,516, தங்க நகைகளின் மதிப்பு ரூ. 8,16,960, வங்கியில் ரொக்க இருப்பு ரூ.10,57,524 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி பெயரில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன.

உம்மன் சாண்டி பெயரில் அசையா சொத்துகள் ஏதும் இல்லை. 38 கிராம் தங்க நகைகள் மட்டுமே வைத்துள்ளார் உள்ளன. உம்மன் சாண்டியின் 2014-2015ம் நிதியாண்டுக்கான மொத்த வருமானம் ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 230 ஆகும். அவருக்கு கடன் எதுவும் இல்லை. வழக்குகளும் நிலுவையில் இல்லை என பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர்‌‌களின் சொத்து விவரம்

தேர்தலில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்து விவரம்



தினமும் மிளகு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!


healthbenefitsofpepperminttea2-30-1461995845எப்பவும் நாம் அரக்கப் பரக்க நான்-ஸ்டாப்பாக ஓடினாலும் மூளையை அப்பப்போ ரீசார்ஜ் பண்ணுவதுண்டு. சில சமயங்களில் சார்ஜ் போதாமல் நம் மூளையின் பேட்டரி குறையும் போது ஏற்படுவதுதான் உடல் மற்றும் மனச்சோர்வு. அதனை நீக்குவதற்கு கொஞ்சம் மெனக்கெட்டால் திரும்பவும் நான்-ஸ்டாப்பாக ஓடலாம். இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டதுதான் புதினா டீ. “நார்தம்ப்ரியா” பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ‘மார்க் மோஸ்’,’ ராபர்ட் ஜோன்’, மற்றும் ‘லக்கி மோஸ்’ ஆகியோர் புதினாவில் உள்ள மகத்துவத்தை ஆராய்ச்சி செய்து அறிக்கையை, “பிரிட்டீஷ் சைக்காலஜி சொஸைட்டி ” நடத்திய மாநாட்டின் போது சமர்ப்பித்தனர். ஆய்வில் வெற்றி பெற்றது புதினா டீ: இந்த் ஆராய்ச்சியில் சுமார் 180 பேர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆய்வு தொடங்கும் முன்பாக, அவர்களிடம் அவர்களின் மனநிலைப் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. பின்னர் அவர்களை மூன்று பிரிவாக பிரித்து, ஒரு பிரிவிற்கு புதினாடீ யும், இன்னொரு பிரிவிற்கு செவ்வந்தி இதழ்களில் தயாரிக்கப்பட்ட டீ யும், மீதி இருந்த பிரிவிற்கு வெந்நீரும் கொடுக்கப்பட்டது. பின் 20 நிமிடம் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர்களின் அறிவாற்றல் சோதித்தார்கள்.மேலும் அவர்களின் மன நிலைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் செவந்தி இதழ் டீ மற்றும் வெந்நீரை விட புதினாடீ குடித்ததனால் நினைவாற்றலும், புத்திக் கூர்மையும் மேம்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். செவ்வந்தி-மந்தத்தன்மை தரும்: செவ்வந்தி இதழ் டீ குடிப்பதனால், நினைவாற்றலும், கவனித்தலும் குறைந்து காணப்பட்டது. மேலும் அது மந்தத்தன்மையும் கொடுக்கிறதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. மிளகு மற்றும் செவ்வந்தி இதழ்கள் இரண்டுமே மூலிகைகளாய் இருந்தாலும்,நேர் எதிர் குணங்களை பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது”என வியந்திருக்கிறார் டாக்டர் மோஸ்.

பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்!

பொதுவாகவே, மீனில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புகள் உள்ளன. கண் பாதிப்பு, இதய நோய், ஆஸ்துமா போன்ற எண்ணற்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மீன் ஒரு சிறந்த உணவு.
Bucket-and-milk
இவ்வளவு சத்துகளைக்கொண்ட மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும். அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும். தர்ப்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.
பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும். கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின், பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கோழி மற்றும் மீன் இரண்டையும் பால் மற்றும் எள்ளுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலின் மிக நுண்ணியத் துளைகள் கெட்டு, உடல்நலக் கெடுதல் உண்டாகலாம்.

பிராய்லர் சிக்கன் ஏற்படுத்தும் சிக்கல்

Chicken
பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது.
கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளுக்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து, பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள். பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன.
இந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 100ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் சிறுநீரகங்ளிலும் கல்லீரலிலும் கேன்சர் நோய் மற்றும் குடல் புற்று நோயும் உருவாகிறதாம்.
இன்றைக்கு நாம் அதிக அளவு லெக் பீஸைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம். அமெரிக்க கம்பெனிகளும் லெக் பீஸைதான் நம்மிடம் முன்னிறுத்துகிறது. அதிலிருக்கும் அரசியல் மிக முக்கியமானது. கோழிகளின் கால்பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் கன்ட்டன்ட் இருக்கிறது. வயிற்று பகுதியில் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அமெரிக்கர்கள் கோழிக்கால்களை சாப்பிடமாட்டார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கோழிக்கால்களை அவர்கள் வெறும் கழிவு பொருளாகத் தான் கருதுகிறார்கள்.
பெரிய நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் நம்மை கோழி கால்களுக்கு அடிமைப்படுத்தி விட்டார்கள். கோழிக்கறி என்றாலே லெக் பீஸ்தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக்பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்ததை ஏற்படுத்திவிடும்.

பாம்பு என்றால் விஷம் –

யார் இந்த rangaraj pandey... ஓர் அலசல்!
‘ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்’ என்பது தமிழர் பழமொழி. அப்படி ஒண்ட வந்த பிடாரி – ரங்கராஜ் பாண்டே.
இவரது முழுப்பெயர் ரங்கராஜ் பாண்டே ரகுநாத் ஆச்சார்யா. பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட பார்ப்பனர்.
இவரது தந்தை பீகாரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு அர்ச்சகராக வந்தவர். ரங்கராஜ் பாண்டே ரகுநாத் ஆச்சார்யா இங்கேயே பிறந்து வளர்ந்தவர். வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ்.காரர். ஆரம்பத்தில் ‘தினமலர்’ நாளிதழில் தலைமை நிருபராக குப்பை கொட்டிக்கொண்டு இருந்தவர்.
இவரை தந்தி டிவிக்கு பூபதி என்பவர்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வேலைக்கு எடுத்தார். ஆனால் தனது உள்குத்து திறமையால் தந்தி டிவியின் செய்திப்பிரிவு ஆசிரியராகி விட்டார் ரங்கராஜ் பாண்டே. பணியிலிருந்து இவரால் வெளியே தள்ளப்பட்ட ஜெயசீலன், வேலையைவிட்டுப் போகும்போது, “இவனை மாதிரி ஒரு மோசமான ஆளை பார்த்ததே இல்லை” என்று மண்ணை வாரி தூற்றாத குறையாக சொல்லிவிட்டுப் போனார்.
தன்னுடன் வேலை பார்க்கிற யாராக இருந்தாலும், அவர்களை மட்டம் தட்டி, முன்னேற விடாமல் செய்வதில் ரங்கராஜ் பாண்டே கில்லாடி.
மை.பா.நாராயணன் என்பவர் தந்தி டிவியில் ‘கேள்விக்கென்ன பதில்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அவரை ஓரங்கட்டி அந்த நிகழ்ச்சியை அபகரித்துக் கொண்டவர்தான் இந்த பாண்டே. அதுபோல், அங்கு வேலை பார்த்த மதிவாணனையும் இவர் ஓரங்கட்ட, “நான் வேலையை விட்டு போவதற்கு காரணமே பாண்டேதான்” என்று சொல்லிவிட்டு அவர் போனார்.
ரங்கராஜ் பாண்டே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதால், தந்தி டிவியில் பாரதிய ஜனதா கட்சி செய்திகளுக்கும், பிரமுகர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
சமஸ்கிருத பார்ப்பன மதத்தினர் அல்லாத பிற மதத்தினரை மட்டம் தட்டுவதை தன் ஊடகப் பணியாக தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.
தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற சொற்களெல்லாம் இவரது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றின மாதிரி இருக்கும். தூக்குக்கயிறு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் உயிரை காப்பதற்காக தீக்குளித்து உயிர் நீத்த தோழர் செங்கொடி பற்றி, “காதல் தோல்வியால் அவர் தீக்குளித்தார்” என்று செய்தி வெளியிட்ட மானங்கெட்ட ஜென்மம் இந்த ரங்கராஜ் பாண்டே.
இவருக்கு ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியின் ‘ஐட்டம் பாய்’ ஆன அர்னாப் கோஸ்வாமி போல் ஆக வேண்டும் என்று ஆசை. அதனால், பேட்டி கொடுக்க வரும் பிரமுகர்களை பேசவே விடாமல், முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, இவரே பேசிக்கொண்டு இருப்பார்.
இதில் பாண்டேவை
குறை சொல்ல ஒன்றுமில்லை.
பாம்பு என்றால் விஷம் –
என்பதை பாண்டே
மட்டுமின்றி அகில இந்திய அளவில் பலரும் தற்போது நிரூபித்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால், தங்களது லாப வேட்டைக்காக ஊரறிந்த அயோக்கியனுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவும் தயங்காத தந்தி தொலைக்காட்சியின் ஊடக தர்மம் தான் நமது கவனத்துக்குரியது.
இன்னும் வரும் தந்தி சந்திக்கு...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ரமலான் நோன்பு


கலிஃபோர்னியா ஆராய்ச்சியாளர்களின் முடிவில் நோன்பு நோற்பதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
Ramadan-1000x600

Power of Learning

நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...

நன்றி : Abdul kader

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம்

மோடியும் ரயில் பயணம் செய்தார், மூன்று பேர் பயணம் செய்வதற்கு ஒரு பெட்டி முழுவதையும் ஆக்கிரமித்து அதில் பொது மக்கள் ஏறாத வண்ணம் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி பயணம் செய்தார். மோடியின் பயணத்தால் மெட்ரோ நிறுவனத்துக்கு நஷ்டம் தான்.
இதோ ராகுல் காந்தியும் பயணம் செய்கிறார் சாதரான வகுப்பில் பொதுமக்களோடு பொதுமக்களாக இருந்து பயணம் செய்கிறார்.
இந்த இரண்டு காட்சிகளும் இந்த வாரம் நடந்தது தான்.

Hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து விலக்கிவிடுவார்கள்.
அதே நிலையில் அவர்கள் இருந்துகொண்டிருக்க, "யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் தன் கருணையிலிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புஹாரி (435), (436)

May 6 - "‪#‎இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம்‬ -ஆலங்குடி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
🌂அன்பார்ந்த சுன்னத் ஜமாஅத் , ஜாக் , த.மு.முக, தப்லிக் ஜமாஅத் , SDPI சகோதரர்களே...
🌂தவ்ஹீத் கொள்கை பற்றி தெளிவாகவும் , உங்களின் சந்தேகங்களுக்கு ஆதாரப்பூர்வமாக அறிவூப்பூர்வமாக பதிலளிக்கும் வகையிலும் ஏகத்துவத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை சார்பாக வருகிற மே 6-ம் தேதி "‪#‎இஸ்லாம்_ஓர்_எளிய_மார்க்கம்‬ " ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
🌂இதன் முக்கிய நோக்கம் ஒட்டுமொத்த சகோதரர்களின் சந்தேகங்களுக்கும் அவர்களுக்கு புரியும் வகையில் குர்ஆன் ,ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்பதுதான்...
🌂உங்களின் கேள்விகள் தவ்ஹீத் கொள்கை என்றால் என்ன?...மக்களை நீங்கள் பிளவுப்படுத்துகிறீர்களா?...தொழுகையில் தொப்பி அணிவது சுன்னத்தா?...அரசியலில் நீங்கள் ஆதரவு அளிக்காதது ஏன்?...அரசியலில் களமிறங்காதது ஏன்? ...தொழுகையில் விரலசைப்பது ஏன்?....நெஞ்சில் தக்பீர் கட்டுவது ஏன்?...இணைவைப்பவர்களை பின்பற்றி தொழலாமா?...இணைவைப்பவர்கள் பள்ளிவாசலை நிர்வகிக்கலாமா?...
🌂இப்படி உங்களின் எந்த கேள்விகளாக இருந்தாலும் அதற்காக முறையாக , தெளிவாக பதிலளிக்க தயாராக இருக்கிறோம்...
🌂இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோதரர் பக்கிர் முஹம்மது அல்தாபி M.A கலந்து கொண்டு பதிலளிக்க உள்ளார்கள்...
🌂இடம் :- மங்களம் மஹால் , K.V.S தெரு , ஆலங்குடி
🌂நேரம் :- மாலை 4.30 மணி முதல் 10 மணி வரை ..
🌂நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
🌂ஆக , இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறது...
☄தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பெருங்குடல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!


பெருங்குடல் மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளது வெளிப்படுத்தும்
அறிகுறிகள்!!!

தாஜ்மஹாலில் கோயில் கட்டத் துவங்கும் காவிகள் – வெளிச்சத்திற்கு வரும் உண்மை


ஹைதராபாத் சார்மினார் பள்ளிவாசலைத் தொடர்ந்து தாஜ்மஹாலின் நாற்புற வாயில்களில் கோயில் கட்ட பணிகள் உருவாக்கப்பட்டுவிட்டன.

1965ல் ஹைதராபாத் சார்மினார் கட்டூமானத்தின் ஒரு கல் மீது காவி வர்ணம் பூசி ஒரு கிழவியின் பராமரிப்பில் பூஜை செய்யப்பட்டு வழக்கம் போல் பலரும் அக்கல்லை வணங்கி வரும் தொடரில் ஒரு பஸ் அக்கல்லின் மீது மோதி கல் உடைந்தவுடன் 2012ல் இரவோடிரவாக‌ குயுக்தியாக அக்கல்லுக்கு பதிலாக லட்சுமி சிலையை வைத்து பக்காவாக கட்டுமானங்கள் உருவாக்கி
பாக்கியலட்சுமி கோயில் என பெயரும் இட்டு தடபுலாக விழாக்களும் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
இதே போன்று தாஜ்மஹாலிலும் கைவைக்கக் காவிகள் துவங்கியுள்ளனர்.

WhatsApp-Image-20160429 (1)
kaalaimalar.net
WhatsApp-Image-20160429
kaalaimalar.net
Bhagyalakshmi temple is a Hindu temple located in Hyderabad, India. This temple is located at the base of the city’s historic Charminar declared as monument under care of Archaeological Survey of India (ASI)
.
தாஜ் மஹாலை கோயிலாக்க முதல் கட்டமாக காவிகள் கிளப்பிய சர்ச்சை
தாஜ் மஹால் சிவன் கோயில் அல்ல என திட்டவட்டமாக மறுத்த டில்லி அரசு
The temple is dedicated to the Goddess Lakshmi.
.
According to historians such as Narendra Luther maintain that temple had no existence of any sorts until the 1960s.
.
According to these historians, one of the stones near Charminar was painted with the saffron color in 1965, and an old woman became the person in-charge of this “shrine”.
.
After an APSRTC bus collided with the stone and damaged it, a pucca structure was created at the site. The stone was replaced with an idol of the goddess Lakshmi. Every year, Bhagyalakshmi temple is decorated for Dasara and Deepawali for a few days.
.
The temple has been a subject of controversy due to its location in a Muslim-majority area, and the alleged threat it poses to the historic Charminar structure.
.
In the 1960s, the replacement of the holy stone with an idol and the addition of a temporary shed evoked communal tensions.
.
During the night of 1 November 2012, the temple administration started to carry out some construction work without the permission of Archaeological Survey of India (ASI), stating that they were decorating the temple ahead of the Diwali festival.
.
The construction activity, which was illegal according to the ASI, was stopped by the police.
.
This construction work at the temple premises triggered Hindu-Muslim tension in the city.
.
Some local Muslim politicians feared that the expansion might damage the historic Charminar, which they identify with Islamic heritage.
.
Following this, a few violent incidents were reported in the city.
.
The Archeological Survey of India, in a RTI reply, finally conceded that the controversial Bhagya Laxmi Mandir, adjacent to historical Charminar is a recently constructed ‘unauthorized’ structure.
.
Claims of this temple existing before 1960’s is also rubbished by the following picture taken from The Hindu archives of 1957

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பேப்பர் கப் தயாரிப்பு

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.
சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை.
சந்தை வாய்ப்பு!
டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.
தயாரிப்பு முறை!
மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!
முதலீடு!
இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.
மூலப்பொருள்!
இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும். கட்டடம்! இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம்.
இயந்திரம்! பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
மானியம்! பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .
உற்பத்தித் திறன்! ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.
வேலையாட்கள்! திறமையான வேலையாட்கள் - 2, சாதாரண வேலையாட்கள் - 8, மேலாளர் - 1 , விற்பனையாளர் - 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும்.
மின்சாரம்! ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும்.
பிளஸ்! * ஆண்டு முழுவதும் தேவை இருக்கும்.
* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .
ரிஸ்க்! * பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.
* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.
* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.
அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி குழுக்கள் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம். -----------------------------------------------------------------------------------------------------
''படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!'' பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி
''இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.
சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம்.
உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.''
- க.ராஜீவ்காந்தி

கயவர்களை ஆட்சியில் அமர்த்தினால் இதுதான் நடக்கும்

இந்த அவலத்தை கேளுங்கள்... நம் நாட்டையே அடிமையாக்கும் திட்டம் அல்லவா இது..

Hadis

ஒரு மனிதர் "குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார்.
அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),
37 பேர்கள் கொல்லப்பட்ட மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என 10 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை..
**********************************************************************
மகாராஷ்டிர அரசின் 'பயங்கரவாத எதிர்ப்புப் படை' யால் (ATS) குற்றம் சாட்டப்பட்டு, ஈடு செய்ய இயலாத பெருந் துயரங்களை ஏந்திய ஒன்பது முஸ்லிம்களையும் குற்றமற்றவர்கள் என மகாராஷ்டிர மாநில கோகா (MCOCA) நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.
நீதியரசர் வி.வி.படீல் இந்தத் தீர்ப்பை வாசித்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வர்நீதிமன்ற வளாகத்திலேயே குலுங்கி அழுதனர்.
அந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் யார் என நமக்கு இப்போது தெரியும்.
ஆனால் அந்தக் குற்றச் சுமையை சுமந்து ஒரு வாழ்வை இழந்த இவர்கள், இவர்களில் பலர் இளைஞர்கள், என்னென்ன துயரங்களைச் சந்தித்திருப்பர்..
அவர்கள் எத்த்னை சித்திரவதைகளைத் தம் உடம்பிலும் உள்ளத்திலும் தாங்கி இருப்பர்....
எத்தனை ஆண்டுகாலம் சிறைகளில் வாடியிருப்பர்..
வழக்குக்காக அவர்களின் குடும்பங்கள் எத்தனை காசையும், உறங்காத இரவுகளையும் அழித்திருப்பர்...
அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருக்கும்..
அவர்களின் வேலைகளும் தொழில்களும் அழிந்திருக்கும்..
அவர்களின் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் திருமண வாய்ப்புகள் பறிபோயிருக்கும்...
அவர்களின் குடும்பங்கள் குற்றவாளிகளைப் பெற்றவர்கள் என எத்தனை ஒதுக்கல்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் ஆளாகியிருக்கும்...
அந்த ஒன்பது பேர்களும், அவர்களின் இரத்த உறவுகளும் மட்டுமா இந்தக் குற்றச்சாட்டின் சுமையைத் தாங்கியிருப்பர்? இந்திய முஸ்லிம் சமூகம் முழுமையும் அல்லவா பழிச் சுமையைத் தாங்க வேண்டி இருந்தது.....
சுவாமி அசிமானந்தரின் வாக்கு மூலம்தான் அவர்களை முதன் முதலில் அந்தக் குற்றச் சுமையிலிருந்து விடுவித்தது. "அதைச் செய்தது நாங்கள். இந்துத்துவப் பயங்கரவாதிகள்" என்பதை அந்த மனிதனில் எங்கோ ஒளிந்திருந்த ஈரம் வெளிக் கொணர்ந்தது. ஆனாலும் அதை நமது உயர் புலனாய்வு அமைப்புகளும் நீதிமன்றமும் கணக்கில் எடுத்துக்கொள்ள மேலும் இத்தனை ஆண்டுகள்...
இவர்களின் இழப்புகளை யார் ஈடுகட்டப் போகிறார்கள்?
ஈடுகட்டிவிடத்தான் முடியுமா?
(படத்தில் நீதிமன்ற வாயிலில் அந்த ஒன்பது பேர்களில் சிலர். இந்தச் செய்தியைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ள The Hindu நாளிதழுக்கு நன்றி)

முருங்கை மகத்துவம்..!


முருங்கை வேரின் மருத்துவ குணம்
முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து குறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்பு, விக்கல், முதுகுவலி போன்ற நோய்கள் நீங்கும்.
முருங்கை பட்டை
முருங்கை பட்டையை நன்றாக பொடித்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். சிறுநீரை தெளிய வைக்கும்
முருங்கை இலை காம்பு
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .
முருங்கை விதை
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து லேசாக நெய்யில் வதக்க வேண்டும் , பிறகு அதை பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு குறையும் , ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும் . உடல் வலுவடையும்
முருங்கை காய்
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் மூல நோய்க்கு மிக சிறந்த மருந்தாகவும் . சளியைப் போக்கும் தன்மைகொண்டதாகவும் இருக்கிறது
முருங்கைக்காய் பொதுவாக அதிக சத்துக்களை கொண்டது. முருங்கைக் காய் பொரியல் அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும், தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
முருங்கை பிஞ்சு
முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது , இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது . எலும்பு மஞ்ஜைகளை வலுபடுத்துகிறது.
முருங்கை பூ
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .
முருங்கை கீரை
முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும் . முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது எனவே இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும்.

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்


பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.
சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.
ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம்.
அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!!
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.
அதீத தாகம்
சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
மங்கலான கண் பார்வை
அதிக அளவிலான குளுக்கோஸ், சர்க்கரை நோயாளியின் இரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து திரவத்தை வெளியேற்றுவதினால், அது அவரின் கண் பார்வையை மங்கச் செய்யும். மேலும் இது கண்களின் கூர்ந்து நோக்கும் திறனை பாதிக்கும். சர்க்கரை வியாதிக்கு சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில், அது கண் பார்வை குறைவை உண்டாக்கும். ஏன் சில சமயங்களில் கண் பார்வையை கூட பறித்து விடும்.
எடை குறைதல்
இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.
சோர்வு
சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.
கைகள் மரத்துப் போதல்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.
சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும்
இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.
சரும வறட்சி
புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும்.
எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும்
நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.
வீக்கமடைந்த ஈறுகள்
கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.