இன்று காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெஜ்.ராஜா , தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்களுடையது தான் .நாங்கள் தான் அதிமுக வுக்கு மாற்று அணி என்று கூறினார்
தாமதமாக வந்தாலும் சட்டப்படி வந்துள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது எல்லாம் இவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் சில இடங்களையாவது பிடித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள்..
இப்போது திராவிட கட்சிகளும்,முஸ்லிம்களும்,தலித்களும் கவனமாக 2016 சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். இது பெரியார் பிறந்த மண்.எந்த ஆர்.எஸ்.எஸ்-ஐ,பாஜகவை பெரியார் எதிர்த்தாரோ அந்த கூட்டம் தமிழகத்தில் அரசியலை கைவிட வேண்டும். திராவிட கட்சிகள் கவனமாக கூட்டணியை அமைக்கவேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை பாஜக கை பற்றியது நம்மில் ஒற்றுமை இல்லாமையாலே. ஒரு இஸ்லாமிய அமைப்பு காங்கிரசுக்கும்,ஒரு இஸ்லாமிய அமைப்பு திமுகவுக்கும்,சில இஸ்லாமிய அமைப்பு அதிமுகவுக்கும் ஓட்டுக்களை பிரித்து போட்டதினால்தான் என்பதை மறுக்கமுடியாது. நமக்குள்ள வெறுப்பை தேர்தலில் காட்டாதீர்கள்.இது நமக்கு பலவீனம்.அவர்களுக்கு இது பலம்.
அன்று பழனிபாபா 400 ஜமாத்களை ஒருங்கிணைத்தார். நமது இஸ்லாமிய இயக்கங்களுக்கும்,கட்சிகளும் ஜமாத்களை ஒருங்கிணைக்க வேண்டும். இந்திய முஸ்லிம்களுக்கென தனியாக ஒரு அரசியல் அமைப்பு காண்பது இவ்வேளையில் மிகவும் அவசியமாகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு இல்லையென்றால், மத்தியிலும்,மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாக்கப்பட முற்றிலும் அவசியம் முஸ்லிம்களிடையே ஒற்றுமை.
இந்த பணியை அன்று பாபா செய்தார் அரசியல் சக்தியாக உருவெடுத்தார் அதன் விளைவு இந்திய தேசத்தின் பிரதமரான இந்திரா காந்தியை, முன் அனுமதி பெறாமல் நினைத்தவுடன் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த ஒருவர் பழனி பாபா.
இந்த பணியை அன்று பாபா செய்தார் அரசியல் சக்தியாக உருவெடுத்தார் அதன் விளைவு இந்திய தேசத்தின் பிரதமரான இந்திரா காந்தியை, முன் அனுமதி பெறாமல் நினைத்தவுடன் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த ஒருவர் பழனி பாபா.