செவ்வாய், 5 ஏப்ரல், 2016

புனையப்பட்டு(307 386/1 294 304)



சகோதரர் மதுக்கூர் மைதீன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஆதரவு வெறி கொண்ட காவல்துறை கயவர்களால போலி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு பட்டு கோட்டை சப்ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று மேலும் சில வழக்குகள் புனையப்பட்டு(307 386/1 294 304) பட்டுக்கோட்டை சப் ஜெயிலில் இருந்து,திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இன்றுவரையிலும்,சிறைவாசிகளுக்காக போராடுகிறோம் என்று மார்தட்டி பெருமை பேசும் எந்த இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்ததாக தெரியவில்லை...மதுக்கூர் மைதீன் அவர்களின் மீது தனிப்பட்ட கருத்து முரண்பாடுகள் சிலருக்கு இருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்தும் காலகட்டம் இதுவா என்று சற்று சிந்துத்து பாருங்கள்...
அதே போன்று,பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி,சகோதரர் கள்ளிடைக்குறிச்சி செய்யதலி அவர்களையும் சில நாட்களுக்கு முன்பு கர்நாடக காவல்துறை கைது செய்
துள்ளது.அதற்கும் பெரிதளவிற்கு எதிர்ப்புகளும்,கண்டனங்களும் வெளிப்பட்டதாக தெரியவில்லை...
சகோதரர் கிச்சான் புகாரி கைது செய்யப்பட்ட போது,அவரை வைத்து அரசியல் செய்த அனைத்து கட்சிகளும்,செய்யதலி விசயத்தில் மயான அமைதியை கடைபிடிப்பது மிகுந்த அருவருப்பை ஏற்படுத்துகின்றது..
அதிமுக,திமுக போன்ற கட்சிகளை போலவே,சிறுபான்மை அரசியல் கட்சிகளும்,லாப நட்ட கணக்கில் அடிப்படையிலேயே,சிறுபான்மையினரின் பிரச்சனையை அணுகுவது மிகுந்த வெட்கட்கேடானது..

Related Posts: