திங்கள், 18 ஏப்ரல், 2016

நமது செயல்பாடுகள் சொர்க்கத்தை நோக்கியும்,மறுமையின் வெற்றியை நோக்கியும் செல்ல கூடியதாக அமைய வேண்டுமே



நமது இஸ்லாமிய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது.
ஒரு புறம் சமுதாய பணிகளை முன்னெடுத்து செல்ல,இஸ்லாமிய இயக்கங்களில் ஒண்றினைகிறார்கள்.
ஒரு புறம் பொருளாதாரத்தின் பால் ஈர்ப்பு கொண்டும்,குடும்ப அரவணைப்பில் முழ்கியும் குடும்ப பாதுகாப்பு அரணாக ஒண்றினைகிறார்கள்.
ஒரு புறம் சமூக விடுதலைக்காகவும்,அரசியல் புகழ்ச்சிகாகவும் அரசியல் கட்சிகளில் ஒண்றினைகிறார்கள்.
ஒரு புறம் சமூக சேவைகளில் ஒண்றினைகிறார்கள்.
ஒரு புறம் மதுவிற்கு அடிமையாகி, மது பான கடைகளில் ஒண்றினைகிறார்கள்.
ஒரு புறம் விபச்சாரத்தில் முழ்கி, விபச்சார கூடங்களில் ஒண்றினைகிறார்கள்.
ஒரு புறம் வட்டியின் பால் நெருங்கி,வட்டியில் முழ்கி குடும்ப வறுமையை மேலும் வறுமை கோட்டிற்கு மேல் அதிகரிக்க வட்டியின் பக்கம் நோக்கி ஒண்றினைகிறார்கள்.
ஒரு புறம்,திரை கூத்தாடிகளை ஆதரித்து அவனை ரசிகனாக ஏற்று கொண்டு,பொது தளத்தில் தனது புகைப்படங்களை பதியும் அவளநிலை.
எனதருமை இஸ்லாமிய சொந்தங்களே,நமது செயல்பாடுகள் சொர்க்கத்தை நோக்கியும்,மறுமையின் வெற்றியை நோக்கியும் செல்ல கூடியதாக அமைய வேண்டுமே தவிர,நரக நெருப்பில் நம்மை ஆழ்த்தி விட கூடாது.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.