உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துவோரிடம் ‘வாட்ஸ்–அப்’ மோகம் அதிகரித்து வருகிறது. இதில் தகவல்கள், புகைப்படம், வீடியோ, உடனே பரிமாறி கொள்ளலாம். இதனால் இது பெறும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
வாட்ஸ்–அப் வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமைகளை அந்நிறுவனம் அடிக்கடி புகுத்து வருகிறது. வாட்ஸ்–அப் குருப்பில் 100 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதை மாற்றி 256 பேர் வரை உயர்த்தியது.
தற்போது வாட்ஸ்–அப்பில் மறையாக்கம் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஒருவருக்கு அனுப்பப்படும் தகவல்கள், புகைப்படம், வீடியோ என எதுவானாலும் மறையாக்கம் செய்யப்பட்டு அனுப்பப்படும். இதனால் இந்த தகவல்களை யாரும் இடை மறித்து ஹேக் (திருட) செய்ய முடியாது.
இதுகுறித்து வாட்ஸ்–அப் நிறுவனர் ஜன்கும் கூறுகையில், “வாட்ஸ்–அப் நிறுவனம் எப்போதுமே தகவல்களை பாதுகாக்க முன்னுரிமை அளித்து வருகிறது.
தற்போது பெருமையுடன் அறிவிக்கிறோம். வாட்ஸ்– அப் தகவல்களை மிகவும் பாதுகாப்பானதாக்கும் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம்.
புதிய வாட்ஸ்–அப் அப்டேட் மூலம் உங்களது தகவல்கள், புகைப்படம், வீடியோ, காணொலி, குரூப்பில் பேசுவது போன்றவைகளை யாரும் திருட முடியாது. யாரும் இடைமறித்து பார்க்க முடியாது. ஏன் நாங்கள் கூட பார்க்க முடியாது” என்றார்.