சனி, 16 ஏப்ரல், 2016

இணையப்பொருட்களை கையாளுவதற்காக RIOTஎனும் இயக்கமுறைமையை பயன்


1பொதுவாக 8 பிட் முதல் 32 பிட்வரையுள்ள மிகச்சிறிய சாதனங்களை கட்டுப்படுத்து வதற்காக பழைய இயக்கமுறைமை அல்லது உள்பொதிந்த இயக்கமுறைமை பொருத்தமாக அமைவதில்லை அதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த RIOTஎனும் இயக்கமுறைமையாகும். இது ஒரு கட்டற்ற கட்டணமல்லாத இணைய பொருட்களை செயற்படுத்துவதற்கான பயன்பாடுகளுடன் இணக்கமானமுறையில் செயல்படும் ஒருமுழுமையான இயக்கமுறைமையாகும் இது 2008 ஆம் ஆண்டில் கம்பியில்லா முனைமத்திற்காக உருவாக்கபட்டது தற்போது இணையத்தின் சின்னஞ்சிறு பொருட்களை செயற்படுத்துவதற்கான பயன்பாடுகளை கட்டுபடுத்தவதாற்காக பயன்படுத்திகொள்ளப் படுகின்றது. இதற்கென தனியாக புதிய நிரல்தொடர்சூழல்எதுவும் தேவையில்லை சி அல்லது சி++ ஆகிய மொழிகளையே நடப்பிலுள்ள gcc,gdbபோன்ற கருவிகளுடன் சேர்த்து பயன்படுத்திகொள்ளலாம்.இது குறைந்தஅளவே வன்பொருளை சார்ந்த குறிமுறைவரிகளை கொண்டதாகும். இது8பிட் 16 பிட் 32பிட் ஆகிய மிகச்சிறிய. கட்டுபாடுகளின் தளத்தில் செயல்படும் திறன்மிக்கதாகும்.மேலும் இது பல்லிழை(multithread) செயல்படும் தன்மை கொண்டதாகும் அதுமட்டமின்றி இது 802.15.4, Zigbee, 6LoWPAN, ICMP6, Ipv6, RPL,CoAP போன்ற அனைத்து வலைபின்னல் கட்டுகளையும் ஆதரிக்கின்றது கூடுதலாக இது நிலையான இயங்கும் நினைவகத்தை நிருவகிக்கும் திறன்கொண்டதாகும். நம்முடைய கைவசம் வன்பொருள் எதுவுமில்லை யென்றாலும் இதனுடைய வெளியீடுகள் முனைமத்தில் பிரதிபலிக்க கூடியதாகும்.இது MSP430, ARM7,x86 , Corex-M0,M3,M4 என்பன போன்ற கட்டமைப்பை ஆதரிக்கின்றது இது லினக்ஸ் ஓஎஸ்எக்ஸ் போன்ற இயக்கமுறைமையை ஆதரிக்கக் கூடியதாகும். இது வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம் ஆகிய சூழ்நிலைகளின் சென்சார்கள், அல்ட்ராசோனிக் சென்சார், ரேடியோரிஸிவர்,அகிலோமீட்டர், ஆர்டினோ, ஆட்மெல் என்பன போன்ற சென்சார் களுக்காக முன்கூட்டியே கட்டமைக்கபட்டு வருகின்றது. பெரும்பாலான Telosb,ST, Zolertia, MSP430, என்பன போன்ற சென்ஸார் போர்டுகளை இது ஆதரிக்கூடியதாகும். இணைய பொருட்களை செயற்படுத்திடும் பயன்பாடுகளை கட்டுபடுத்திடுவதற்காக ஏற்கனவே கொண்டிகி இயக்கமுறைமை, டைனிஇயக்கமுறைமை ஆகியவை நடைமுறையில் இருந்தபோதிலும் நினைவகத்தை பயன்படுத்துவதிலும் ஆதரிப்பதிலும் இந்த RIOTஎனும் இயக்க முறைமையானது அவைகளைவிட சிறந்துவிளங்குகின்றது. தற்போது ஐஓட்டி சென்ஸார்களுக்காக குறைந்த அளவே இயக்கமுறைமைகள் உள்ளன அவைகளுள் இந்த RIOTஎனும் இயக்கமுறைமையானது பெரும்பாலான சென்ஸார் போர்டுகளையும் அவைகளின் கட்டமைவுகளையும் சென்ஸார்களையும் ஆதரிக்க கூடியதாக விளங்குகின்றது. இதனுடைய புதிய புதிய பதிப்புகள் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்பட்டுகொண்டே இருப்பதால் இது மிகசிறப்புடனும் புத்தாக்கத்துடனும் செயல்படும் வல்லமைகொண்டதாகவுள்ளது. ஆர்டினோ ,ராஸ்பெரிஆர் ஆகியவற்றை பயன்படுத்திடும் பயனாளிகளும் மாணவர்களும் இணையபொருட்களுக்கான அமைவின் திறனில் குறைவுஏற்படாமல் தங்களுடைய சென்ஸார்களை பயன்படுத்தி கொள்வதற்கு இந்த RIOTஎனும் இயக்கமுறைமையானது பெரிதும் பயனுள்ளதாக அமைகின்றது தேவைப்படுவோர் இதனை https://github.com/RIOT-OS/RIOT/archive/master.zip/ எனும் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்க. மேலும் விவரம் தேவையெனில் http://www.riot.org/ எனும் இணைய தளத்திற்கு செல்க

Related Posts: