ஞாயிறு, 17 ஜூலை, 2016

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக சுன்னத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம்.

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக சுன்னத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம்.
# வலைதள செய்தி.
முஸ்லிம்களை வேறோடு துடைத்தெறிய தேர்ந்தெடுக்கப்பட்ட செயல் திட்டங்களுடன் வெகு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் RSS & சங்பரிவார தீவிரவாத இயக்கங்களை எதிர்த்தோ -
நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நேரடியாக - வெளிப்படையாக அரச பயங்கரவாதம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பாஸிஸ BJP அரசுகளை எதிர்த்தோ -
துளியளவு போராட்டமும் நடத்த துப்பில்லாத சுன்னத் ஜமாஅத் -
மார்க்க விஷயங்களில் முரண்பாடு என்னும் உள்வீட்டுப் பிரச்சினையை வீதிக்கு கொண்டுவந்து -
கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறியும் சாதுரியத்தை காணும்பொழுது -
உயிர்களை - உடமைகளை - உரிமைகளை கண்ணியங்களை விட -
எங்களுக்கு "சோத்து சட்டியே" முக்கியம் என அவர்கள் கருதுவதாகவே தோன்றுகிறது.

 மௌலவி நுஹ்மான்....சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்னும் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு நீதியாக சிந்தியுங்கள்.....தலைமை ஹாஜி யை மாற்றுங்கள் என்று அவர்கள் போராட்டம் நடத்தினால் மாற்ற மாட்டோம் என நீங்கள் போராட்டம் நடத்திவிட்டு போங்கள்.....அதை விடுத்து இஸ்லாத்தின் எதிரிகள் போல் "தடை செய்" என்றெல்லாம் சொல்வது அறிவுடைமைதானா....? உங்கள் மதம் எங்கள் மார்க்கம் என்று ஜமாலி அவர்கள் பேசியதை நீங்கள் பதிவு வேறு செய்திருக்கிறீர்கள்....அதை திரும்ப திரும்ப கேட்டு அதில் ஏதேனும் ஒன்றேனும் சரியானதா என்னும் 
முடிவுக்கு நீங்களே வாருங்கள்.....மௌலவி ஒருவர் தாக்கப்பட்டதாக சொல்லியுள்ளீர்கள்.....விபரம் தாருங்கள்.....உடனே ததஜ தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.....last but not least....இன்னொருமுறை ஆர்வக்கோளாரில் ததஜ போன்ற இஸ்லாமிய அமைப்பு எதனையும் தடை செய் என கூறிக்கொண்டிருக்காமல் மௌலவி ஜமாலி அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்....ஏனெனில் நாளை ஏதேனுமொரு சூழலில் முஸ்லிம் என்னும் காரணத்திற்காக ஜமாலி அவர்களின் மீதும் இன்றைய பாஸிஸ அரசுகள் அநீதியான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளுமேயானால் அப்பொழுது இவர்கள்தான் உங்களுக்காக களமிறங்குவார்கள் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்....


(
Hakkul Mutthakeen
)

Related Posts: