வெள்ளி, 14 அக்டோபர், 2016

அரசு அலவலகத்தில் நடத்தப்படவிருந்த சட்ட விரோத ஆயுத பூஜை வெற்றிகரமாக கழகத் தோழர்களால் முறியடிக்கப்பட்டது

விரட்டி அடித்த_திவிக..
ஓட்டம் பிடித்த பார்ப்பான்...
சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடிய பள்ளிபாளையம் காவல்நிலையம் முற்றுகை..
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைங்களில் இந்து மத பண்டிகையான ஆயுதபூஜை கொண்டாட கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே மனு கொடுத்திருந்தோம், கழகத்தின் கோரிக்கையையும் மதிக்காமல்,அரசின் சட்ட விதிகளையும் மதிக்காமல் சட்ட விரோதமாக ஜனநாயக மாண்பை சீர்குலைக்கும் வகையில் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் ஆயுதபூஜை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வந்தது,இதை அறிந்து நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் தலைமையில் தோழர்கள் சென்று காவல்நிலையத்தில் விசாரித்தோம்,
பள்ளிபாளையம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜா தோழர்களிடம் ஒருமையில் பேசி கலைந்து செல்லுமாறு மிரட்டியதோடு உள்ளே வைத்து அடித்து விடுவதாகவும் மிரட்டினார்.உடனடியாக தோழர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆயுத பூஜையை நிறுத்துமாறும்,பூஜைக்கு தயார்படுத்திய பொருட்களை அப்புறப் படுத்துமாறும்,ஒருமையில் தகாத வார்த்தைகளை பேசிய துணை ஆய்வாளர் ராஜாவை மன்னிப்பு கேட்குமாறும் கோரிக்கை வைத்தோம்,காவல்துறை தோழர்களை உள்ளே விடாமல் வெளியே நிறுத்தி தோழர்களோடு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது. முற்றுகையின் போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காவல்நிலையத்தை சூழ்ந்து விட்டனர்,உடனடியாக காவல் ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் தலையிட்டு பூஜையை நிறுத்தி,பொருட்களை அப்புறப்படுத்தினார்,அந்த நேரத்தில் பூஜைக்காக முன்னரே அழைக்கப்பட்டிருந்த பார்ப்பான் ஒருவன் வர தோழர்கள் அந்த பார்ப்பானை முற்றுகையிட முயன்றோம்,காவல்துறை உடனடியாக தலையிட்டு பார்ப்பானை பத்திரமாக மீட்டு அனுப்பியது,பின்னர் காவல் துறை ஆய்வாளர் திரு அசோக்குமார் தோழர்களை உள்ளே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்,மாவட்ட செயலாளர் தோழர் மு.சரவணன்,மாவட்ட அமைப்பாளர் தோழர் மா.வைரவேல்,மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி ஆகியோர் காவல் ஆய்வாளரிடம் தோழர்களிடம் ஒருமையில் பேசிய துணை ஆய்வாளர் ராஜாவை கடுமையாக கண்டித்து பேசினர்,அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டார்,பூஜைக்காக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன,அரசு அலவலகத்தில் நடத்தப்படவிருந்த சட்ட விரோத ஆயுத பூஜை வெற்றிகரமாக கழகத் தோழர்களால் முறியடிக்கப்பட்டது..மாவட்ட கழகத்தை சேர்ந்த பெண் தோழர்கள் உட்பட பலர் இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

\