வெள்ளி, 14 அக்டோபர், 2016

வான்வெளியை காக்க அதிநவீன ஏவுகணைகள்..இந்தியா - ரஷ்யா ஒப்பந்தம்

India
இந்தியா தனது வான்வெளி தற்காப்பு படையை வலிமை படுத்த எஸ் - 400 ட்ரையுஃம்ப் என்ற அதிநவீன வான்வெளி தற்காப்பு ஏவுகணை தொகுப்பை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்க உள்ளது.
பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் கோவாவில் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில், பங்கேற்பதற்காக ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகிறார். இந்நிலையில் இதற்க்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
மொத்தமாக ஐந்து, S - 400 ட்ரையுஃம்ப் என்ற ஏவுகணை கட்டமைப்பு தொகுப்புகள் வாங்கப்பட உள்ளது. 3 வகையான ஏவுகணைகள் கொண்ட இத்தொகுப்பு மூலம் ஒரே நேரத்தில் 36 எதிரி விமானங்கள், ஏவுகணைகளை தாக்க இயலும்.
இந்த ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறந்து சென்று தாக்கும் வல்லமை படைத்தவை ஆகும். ரஷ்யாவிடம் இருந்து இது போன்ற ஏவுகணைத் தொகுப்பை சீனா வாங்கியிருந்த நிலையில் தற்போது இந்தியாவும் வாங்க உள்ளது. இதற்கிடையில் கோவா மாநாட்டில் மோடியும் புதினும் நாளை சந்தித்து பேச உள்ளனர்.