வியாழன், 15 டிசம்பர், 2016

ரூ.1078 கோடி பணம்! 225 கிலோ தங்கம் பறிமுதல்! மாட்டுரதெல்லாம் பிஜேபி காரணகளா இருக்கானுங்க !

இன்று ஒரே நாளில் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அதிரடி வேட்டையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. அந்த தகவல்கள் சுருக்கமாக..
  •  அமலாக்கத்துறை சண்டிகரில் 2.18 கோடி பறிமுதல் செய்தது. 17.74 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள். இதில் 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் ஆகும்.

  • கோவா காலன்குவேட் காவல்துறையினர் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 24 லட்சம் ரூபாய் புதிய ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

  • புனேவில் வாகாட் என்ற இடத்தில் 4 பேரை கைது செய்த போலீசார் 67 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

  • டெல்லியில் 5 பேரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார் 3.25 கோடியை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

  • டெல்லியில் இருந்து செல்லாத 500, 1000 நோட்டுக்களை ஒரு கும்பல், மும்பைக்கு கொண்டு சென்று வெள்ளைப்பணமாக மாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

  • ரூபாய் நோட்டுக்களை ஒயர்களை சுற்றி டெலிபோன் சாதனங்களில் மூடி வைத்து விமானம் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பிறகு இதுவரை டெல்லியில் தொழிற்சாலை பாதுகாப்பு படையினர்  170 கிலோ தங்கம், 70 கோடி பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

  • பெங்களூருவில் இன்று 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர். அவர்கள் ஒரு தொழிலதிபரிடம் இருந்து 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • கர்நாடகா மற்றும் கோவாவில் 29.86 கோடி பணம் மற்றும் 41.6 கிலோ தங்க கட்டிகள், 14 கிலோ தங்க நகைகள், கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

  • பண மதிப்பிழப்பு நடவடிக்கை பிறகு கர்நாடகா மற்றும் கோவாவில் மொத்தம் 36 வழக்குகளில் ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி இருப்பதாக கூறியுள்ள வருமான வரித்துறை இதில் 20.22 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் என கூறியுள்ளது.

  • டெல்லி ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் சுக்பீர் ஷோகீன் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத 64 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் புதிய 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள்.

  • ரூ. 1கோடியே 6 லட்சத்து 57 ஆயிரத்து 235 மதிப்புள்ள நகைகளை வருமான வரித்துறை மற்றும் மாநில குற்றப்பிரிவு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் பறிமுதல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஐதராபாத்தில் 16 லட்சம் ரூபாய் புதிய 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கூலிப்படையிடம் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Related Posts:

  • Quran செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாக… Read More
  • மாதுளை பயன்படுத்தும் விதம் 1. 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும். 2. பழச்சாற்றை தேவைக்கேற்ப… Read More
  • வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்... பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அர… Read More
  • கழுத்து வலியும் டிஸ்க் விலகலும் கழுத்து வலி : கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் உணவுப்பழக்கவழக்கம் மற்றும் நவீன வாழ்க்கை மு… Read More
  • பஜ்ரங்தள்' நடத்தும் ஆயுதப் பயிற்சி: பஜ்ரங்தள்' நடத்தும் ஆயுதப் பயிற்சி: 'புதிய தலைமுறை'யின் புதிய செய்தி..! உத்திர பிரதேச மாநிலம் 'அயோத்தி'யில், பாபர் மசூதிக்கு சொந்தமான நிலத்தின் … Read More