புதன், 21 டிசம்பர், 2016

சேகர் ரெட்டியிடமிருந்து தலைமைச் செயலாளருக்கு கைமாறிய ரூ.17 கோடி


சிபிஐயால் கைது செய்யப்பட்ட சேகர்ரெட்டியிடமிருந்து ரூ.17 கோடி அளவுக்கு தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகனுக்கு பணம் கைமாறியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, ராமமோகன ராவின் மகன் விவேக், ரூ.5 கோடி வருமானத்தை மறைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும் வருமானவரித் துறையின் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா நகரிலுள்ள ராமமோகன ராவின் வீடு, திருவான்மியூரிலுள்ள அவரது மகன் விவேக்கின் வீடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். அதில், ராமமோகன ராவின் உறவினர் வீடுகளில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.