சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரிசியல் கட்சிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தலைமை செயலாள ராம்மோகன் ராவ் வீடு மட்டுமின்றி அவரது மகன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என சென்னையில் மட்டும் இன்று 13 இடங்களில் தீவிர சோதனை நடந்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டுள்ளனர்.
இதேபோல் ராம்மோகன் ராவுக்கு சொந்தமான ஆந்திர மாநிலம் பிரசாகம் மாவட்டத்தில் உள்ள 2 வீடுகளிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றன. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்படும் செய்தி அறிந்ததும், ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டுள்ளன. இதனால், அங்கு பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.
வருமான வரித்துறையினரின் சோதனைக்காக போலீஸ் பாதுகாப்பு அந்த பகுதியில் போடப்பட்டது. ஆனாலும், கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். இதையடுத்து துணை ராணுவப்படையினர் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தேர்தல் நேரத்தில், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் கொண்டு வருவது வழக்கம்.
தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது, தமிழக வரலாற்றில் முதல் சம்பவமாக இருந்தாலும், அரசு உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் வருமான வரித்றையின சோதனை நடத்தும்போது, பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்ட சம்பவம், இந்திய அளவில் வரலாறாக அமைந்துள்ளது.
மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்டம், தமிழகத்தில் தொடங்கிவிட்டதா என மக்களின் மத்தியில் அதிர்ச்சிகரமான கேள்விகள் எழுந்துள்ளன.
http://www.newsfast.in/news/army-in-chennai