வெள்ளி, 2 டிசம்பர், 2016

டிசம்பர் 4-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டடிருந்த நடா புயல் இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து நாகை அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தாலும், இன்று தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் டிசம்பர் 4-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது