குஜராத் மாநிலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வங்கிகளில் ரொக்கம் டெபாசிட் செய்த 5,000 கோடீஸ்வரர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டில் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து தங்களிடம் இருந்த பணத்தை பலரும் வங்கிகளில் டெபாசிட் செய்தனர். குஜராத்தைச் சேர்ந்த சுமார் 5,000 கோடீஸ்வரர்கள் தலா ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கிகளில் ரொக்கம் டெபாசிட் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்த, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், வருமான வரித்துறை திகாரிகள் சிலர் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.

வங்கிகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்தவர்கள் பற்றிய விவரங்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வங்கிகள் வெளியிடும். ஆனால், தற்போதே இந்த விவரங்களை குஜராத் வருமான வரித்துறை அதிகாரிகள் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் சிஏ பிரிவு தலைவர் கைலாஷ் கத்வி கூறுகையில், ”ராஜ்கோட்டில் மட்டும் 3000த்துக்கும் அதிகமானவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அகமதாபாத், சூரத், வதோதரா, ஆகியவற்றை சேர்த்தால் 5000த்துக்கும் மேல் இந்த எண்ணிக்கை செல்லும்” என்று தெரிவித்துள்ளார். போதிய ஆதாரங்களுடன் இந்தப் பணத்திற்கான ஆவணங்களை டெபாசிட் செய்தவர்கள் காட்டாவிட்டால், 85 சதவீதம் வரை அவர்கள் வரி செலுத்த வேண்டியது இருக்கும்.