புதன், 21 டிசம்பர், 2016

எத்தனை கோடிதான் புழக்கத்தில் வந்திருக்கிறது?

வங்கியில் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஏடிஎம்களிலும் வங்கிகளிலும் மக்கள் வரிசையில் காத்திருப்பது இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நவம்பர் எட்டாம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 10ம் தேதியில் இருந்து நேற்று முன்தினமான 19ம் தேதி வரையில் 5,92,613 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2,040 கோடி நோட்டுகள் 10, 20, 50, மற்றும் 100 ரூபாய் நோட்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன. 2 ஆயிரம் மற்றும் 500 மதிப்பில் 220 கோடி நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Related Posts: