நெல்லை மாவட்டம் செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் புதுவித போதைக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது தெரியவந்துள்ளது.
பள்ளிகளுக்கு அருகே இரும்பு, மரக்கடைகளில் கிடைக்கும் குறிப்பிட்ட பசைப்பொருளை மாணவர்கள் வாங்கிக் செல்கின்றனர். பின்னர் அதனை போதை தரும் பொருளாக பயன்படுத்துகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பொருட்கள் மாணவர்களுக்கு கிடைக்காமல் இருக்க மத்திய மாநில சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதிவு செய்த நாள் : December 19, 2016 - 07:29 AM