சீன தயாரிப்பு பொருட்களான டிவி உள்ளிட்டவைகளை, மக்கள் ஆங்காங்கே உடைப்பது போன்ற வீடியோக்கள், சமூகவலைதளதங்களில் வைரலாக பரவி வருகின்றன. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவும், இந்திய ஓட்டல்களில், சீன உணவு வகைகளுக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளது சோகமான நிகழ்வு தான் என்றாலும், இந்த விவகாரத்தில் வர்த்தகத்தின் மூலம் சீனாவை தண்டிக்க நினைப்பது நமக்குத்தான் பாதகமாக அமையும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கான காரணங்களையும் அவர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.
ஒரு நாட்டின் உடனான வர்த்தகத்தை துண்டிப்பது என்பது அது சம்பந்தப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தைம் கடுமையாக பாதிக்கும். உள்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுவதினால், மக்களிடையே அது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
உதாரணமாக, இந்தியா 25 நாடுகளுடன் வர்த்தக உறவு கொண்டோம் என்று வைத்துக்கொண்டால், இதன்மூலம், அந்நாடுகள் மட்டுமல்லாது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகளும் பலன்பெறும். இதன்மூலம், இந்திய பொருளாதாரம் வலுப்பெறும்.
நாம் பிரான்ஸ்ல, ஜெர்மனி, நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், தென் கொரியால ஜப்பான், வியட்நாம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைவிட, அண்டைநாடான சீனாவிடமிருந்து அதிகளவில் இறக்குமதி செய்கிறோம். ஏனெனில், சீனா மிகவும் அருகாமையில் உள்ளதால், இறக்குமதி செலவுகள் உள்ளிட்டவைகள் மிகவும் குறைந்தஅளவில் உள்ளன.
சீனா உடனான வர்த்தக உறவை, இந்தியா துண்டிக்குமேயானால், இந்தியாவின் பொருளாதாரம், தென் ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தை விட கீழே சென்றுவிடும். ஏனெனில், இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள பொருட்களில் பெரும்பாலானவை சீனத்தயாரிப்புகளே ஆகும்.
இந்தியர்கள், தங்களுக்கு ஏற்ற பொருட்கள் குறைந்த விலையிலும், அதேநேரத்தில் எளிதாக கிடைக்கும் வகையில் உள்ள சீனத்தயாரிப்பு பொருட்களே ஆகும். ஜப்பான், பிரான்ஸ் நாடுகளின் தயாரிப்புகளை ஒப்பிடும்போது, சீன பொருட்கள் நமக்கு மிகவும் ஏற்றதாக உள்ளன.
சீன தயாரிப்புகளை, நாம் பயன்படுத்துவதன் மூலம், இருநாடுகளும் குறிப்பிடத்தக்க வகையில் பயன் மற்றும் பலன் அடைந்து வருகின்றன.
இந்திய – சீன வர்த்தக உறவு பாதிக்கப்படுமாயின், நாம் இரண்டு விதங்களில் கடுமையாக பாதிக்கப்படுவோம்.
நாம், சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ள 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் அல்லது அதற்கேற்ற பணத்தை நாம் 12 மாதங்களுக்குள் திருப்பி அளித்தாக வேண்டும்.
நாட்டு மக்களுக்கு தேவைக்கு உகந்த வகையிலான பொருட்களை தயாரிக்கும் திறன், தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள், நம்மிடம் இல்லை என்பதை மறுத்துவிட இயலாது.
இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடும் எந்த வகையிலும் தன்னிறைவு பெற்ற நாடாக இருக்க முடியாது. தன்னிடம் உள்ளவற்றை ஏற்றுமதி செய்தும், தேவையானவற்றை இறக்குமதி செய்வதன் மூலமே, ஒவ்வொரு நாடும் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.
ஏழை மக்கள் மேலும் பாதிப்படைவர்
சீன தயாரிப்பு பொருட்கள் விலைகுறைவாக இருப்பதாலேயே, இந்தியாவில் அதன் பயன்பாடு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. உதாரணமாக, ஏசி வாங்க வேண்டும் என்றால், ஐப்பான் தயாரிப்பு ஏசியை, பணக்காரர்கள் மட்டுமே வாங்கி பயன்படுத்த முடியும் அந்தளவிற்கு அதன் விலை அதிகமாக உள்ளது. ஆனால், சீன தயாரிப்பு ஏசியை, இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாங்கக்கூடிய விலையிலயே உள்ளது. எனவே, இந்தியாவில், ஜப்பான் தயாரிப்பு ஏசியை விட, சீன தயாரிப்பு ஏசிகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா முன்கூட்டியே, சீனப்பொருட்களை பெற ஒப்பந்தம் செய்துவிட்டதால், தற்போது வர்த்தக உறவு பாதிக்கப்படின், இந்திய மொத்த விற்பனையாளர்களுக்கும், அவர்களை நம்பி கடைகளை நடத்திவரும் விற்பனையாளர்கள் என பாமர மக்கள் அளவில் இது பெரும்பாதிப்பினை ஏற்படுத்தும். இதன்காரணாக, ஏழை மக்கள், தொழில்நுட்ப வசதியை பயன்படுத்த முடியாத நிலையே ஏற்பட்டு விடும்.
சீன பொருட்களால் இந்திய தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்
இந்தியாவில் அதிகளவில் சீன பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு நஷ்டம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வேண்டிய விசயம் தான். ஆனால், சீன பொருட்களை மொத்தமாக வரவழைத்து, இங்கு சில்லறை விற்பனை செய்வதன் மூலம் பலர் பலனடைந்து வருவதையும் நாம் மறந்துவிட இயலாது.
பொருளாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யாமல், மூலப்பொருட்களாக அங்கிருந்து தருவித்து, இங்கு அதனை அசெம்பிள் செய்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கான பொருளாக மாற்றுகின்றனர். இந்த செயல்களின் மூலம், பல்வேறு நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இதன்மூலம், இந்திய மக்கள் பயன்பெறுவதோடு, பொருளாதாரமும் உயர வழிவகை ஏற்பட்டுள்ளது.
மின்னணு இயந்திரங்கள், அணு உலை மூலப்பொருட்கள், உரங்கள், ஆடிக்கல், போட்டோகிராபிக் அளவீடு உபகரஙணகள், உயிர்வேதி உரல்கள் உள்ளிட்டவைகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு அங்கு பொருளாக மாற்றப்பட்டு, இந்தியாவிலேயே விற்பனை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சீன பொருட்கள் இறக்குமதி தடை செய்யப்படுவதன் மூலம், இந்தியாவில் பல்வேறு வகையான தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். பெரும்பாலான மூலப்பொருட்கள், சீனாவிலிருந்தே தருவிக்கப்படுவதால், இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பது திண்ணம்.
சீனா பாதிப்பு அடையுமா?
இந்திய வீரர்கள் சீனா படுகொலை செய்துள்ளதன் மூலம், அதை நாம் தண்டிக்கவேண்டியது முக்கியம் தான், ஆனால், அந்நாட்டுடனான வர்த்தக உறவுகளை முறித்துக்கொள்வதன் மூலம் சீனா பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்றுதான் வருகிறது. ஏனெனில், இந்த வர்த்தக முறிவின் மூலம் கடுமையாக பாதிக்கப்படப்போவது இந்தியா தான் என்பதே மறுக்க முடியாத உண்மை.
இந்தியா – சீனா வர்த்தக முறிவு ஏற்பட்டால், இந்தியாவிற்கு 5 சதவீத ஏற்றுமதியையும், அங்கிருந்து 14 சதவீத அளவில் இறக்குமதி பாதிப்பும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள், சீனப்பொருட்களை புறக்கணிக்க துவங்கினால், பாதிக்கப்படுவது இந்தியர்களே ஆவர். ஏனெனில், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான பொருட்கள், சீனப்பொருட்களை அடிப்படையாக கொண்டதே ஆகும்.
வர்த்தக உறவு விவகாரத்தில், சீனாவிற்கு நிறைய சந்தைகள் உள்ளன. ஆனால், இந்தியாவிற்கு சீனா ஒன்றே முக்கிய மூல ஆதாரமாக விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கொள்கை நம்பகத்தன்மையை இழக்கும் அபாயம்
இந்தியா – சீனா இடையேயான வர்த்தக முறிவினால், இதுவரை மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் காலாவதியாகும். நாட்டின் வெளிநாட்டு வர்த்தக கொள்கைகளில் நம்பகத்தன்மை இல்லாத நிலை ஏற்படும் சூழல் உருவாகும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வரிகளை உயர்த்துவதனால் பலன் கிடைக்குமா
சீன நாட்டுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்படுவதற்கு பதிலாக, அந்நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால்,அது சர்வதேச விதிகளை மீறியதாகி விடும்.
உலக வர்த்தக அமைப்பு நிர்வகித்துள்ள வரிவிதிப்புகளின் முறைகளிலேயே நாடுகள் வகுத்துக்கொள்ள வேண்டும், இது மீறப்பட்டால், அது பல்வேறு எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியா தற்போது சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் முன்னணி இடத்தில் உள்ளது. இதுபோன்று மற்றொரு நாட்டுடன் வர்த்தக முறிவில் ஈடுபடுமேயானால், நம்மை விட சிறிய நாடுகள் எல்லாம், சர்வதேச வர்த்தகத்தில் நம்மை பின்னுக்கு தள்ளும் வாய்ப்புகள் நிறைய உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.
இந்தியா, 2019 நவம்பரில், பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு அமைப்பில் கையெழுத்திட மறுத்து, இலவச ஒப்பந்த நடவடிக்கைகளிலிருந்து விலகியது. இந்தியா விலகியதால், அந்த இடத்தில் வியட்நாம் இணைந்து கொண்டது. தற்போது கொரோனா நோய்க்கு பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து வரும்நிலையில், அந்த ஒப்பந்தத்தினால், இந்தியாவிற்கு அந்த மருந்து கிடைப்பது கடினமாக காரியமாக மாறியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கண்டுபிடிக்கும் மருந்துகளை, வியட்நாம் நாட்டு மக்கள் எளிதில் பெற இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துகொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.