புதன், 21 டிசம்பர், 2016

மோடி பிளான்’ தமிழகத்தில் ஆரம்பம்..! அடுத்த அதிரடி கலக்கத்தில் அதிமுக!! பிஜேபி காரணுங்க சிக்குவார்களா ?

தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவின் சென்னை அண்ணாநகர் வீட்டில் இன்று காலை வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்குமுன், பலகோடிகள் பிடிபட்ட சேகர் ரெட்டியின் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ராம்மோகன் ராவின் நண்பர்கள், மகனின் நண்பர்கள், தொழிலதிபர்கள் என அவர்களின் வீடுகளிலும் சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், ராம்மோகன் ராவ் மணல் குவாரி ஒப்பந்தம் சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திட காரணமானவராக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ரெய்டால் தமிழக அமைச்சர்கள் மற்றும் இதர உயர் அதிகாரிகளும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுள்ளனர். காரணம்,தலைமை செயலர் ராம மோகன்ராவ் தங்களையும் மாட்டிவிட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, இன்று காலை இந்த அதிரடி ரெய்டு நடத்தப்படுவது மோடியின் திட்டமாகக்கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே, தமிழக சூழலை சரியாக பயன்படுத்தி பாஜ தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
இதனால், சசிகலா உள்ளிட்ட அதிமுக கட்சியினரிடையே அடுத்த அதிரடி என்ன நடக்குமோ? போகிற போக்கைப்பார்த்தால் போயஸ் கார்டனிலும் ரெய்டு நடந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை என்று அதிர்ந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் தலைமை செயலாளர் வீட்டில் ரெய்டு நடப்பது நாட்டிலேயே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: kaalaimalar

Related Posts: