தமிழகத்தில் உயர் அதிகாரியான தலைமை செயலாளர் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரைக்கும் சோதனையில் ரூ.26 லட்சம் ரூ.2000 புதிய நோட்டுகளும், 26 கிலோ தங்கக்கட்டிகளும் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனையை தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைந்துள்ள தலைமை செயலாளர் அலுவலகத்திலும் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில அரசின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மத்திய அரசு ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒரு முன்னோட்டமாக அமையலாம் என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
source: kaalaimalar